‘கொரோனா வைரஸ் பாதிப்பு உயிரிழப்பில்’... ‘ஆண்கள் தான் அதிகம்’... ‘மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தகவல்’...!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் தற்போது வரை கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களில் 70 சதவீதம் ஆண்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான வயது விகிதத்தை மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் வெளியிட்டார். அவர் அளித்த தகவலின்படி, ‘ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களில் 63 சதவிகிதம் ஆண்கள், 37 சதவீதம் பெண்கள். 8 சதவீதம் 17 வயதுக்கு கீழானவர்கள், 13 சதவீதம் 18 முதல் 20 வயது நிரம்பியவர்கள், 39 சதவீதம் 26 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள், 26 சதவீதம் 45 முதல் 60 வயதுக்கும், 14 சதவீதம் 60-க்கும் மேற்பட்டவர்கள்.
கொரோனா பாதித்தவர்களின் உயிரிழப்பில் 70 சதவீதம் ஆண்களே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 55 சதவீதம் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 33 சதவீதம் 45 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள், 10 சதவீதம் 26 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள், ஒரு சதவீதம் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். கொரோனா வைரஸ் பாதிப்பு உயிரிழப்பில் மொத்தமாக 45 சதவீதம் 60 வயதுக்கு குறைவானவர்களே’ என தெரிவித்துள்ளார்.
நாட்டின் கொரோனா வைரஸ் மொத்த பாதிப்பில் 60 சதவீதம் வெறும் 5 மாநிலங்களில் இருந்து மட்டும் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை மகாராஷ்டிரா, கேரளா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர் என சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறினார். 26 முதல் 44 வயதுடையோர்கள்தான் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘2 வயது குழந்தை உட்பட’... ‘மேலும் 14 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ்’... ‘அதிகரித்த எண்ணிக்கை’...!!!
- 'தமிழகத்தின் இன்றைய (29-12-2020) கொரோனா நிலவரம்...' பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா...? - முழு விவரம் உள்ளே
- ‘இந்தியாவில் கொரோனா தடுப்பூசி’... ‘ஒத்திகை எப்படி இருந்தது?’... ‘மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்’...!!!
- 'நள்ளிரவு முதல் மது விற்பனைக்கு தடை!!!'... 'புதிய வகை வைரஸ் அச்சத்தால்'... 'அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள நாடு!!!'...
- "தமிழகத்திற்குள்ளும் வந்துவிட்டது... வீரியமிக்க கொரோனா வைரஸ்..." - சுகாதரத்துறையின் அறிவிப்பால்... பரபரப்பு!!!
- 'பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில்’... ‘6 பேருக்கு உருமாறிய புதியவகை கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி’... ‘வெளியான தகவல்’...!!!
- 'பெண் பத்திரிக்கையாளருக்கு 4 வருஷம் ஜெயில்...' 'அவங்க பண்ணது பெரிய மனித உரிமை மீறல்...' - சீனா அதிரடி...!
- 'தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா???'... 'இங்கிலாந்திலிருந்து திரும்பியவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா???'... 'அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்!!!'...
- 'தமிழகத்தின் இன்றைய (28-12-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!
- 'முன்மாதிரியா இருந்துச்சு’... ‘மற்ற மாநிலங்களை விட’... ‘தற்போது இந்த மாநிலத்தில் மட்டும்’... ‘கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிப்பு’...!!!