'டெபிட் கார்டு நம்பர் உட்பட...' '70 லட்சம் பேரோட தகவல்கள் அந்த வெப்சைட்ல இருக்காம்...' - அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

70 லட்சம் இந்தியர்களின் வங்கி விவரம், பான் எண்கள், வருமானம், தொலைபேசி எண்கள் போன்ற விவரங்கள் டார்க் வெப்பில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானை சேர்ந்த சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ராஜ்சேகர் ராஜாரியா, டார்க் வெப்பில் இவர் கூகுள் டிரைவ் இணைப்பு ஒன்றை இந்த மாதம் கண்டுபிடித்துள்ளார். ராஜ்சேகர் கண்டுபிடித்த இணைப்பில் 70 லட்சம் இந்தியர்களின் டெபிட், கிரெடிட் கார்டு விபரங்கள் தொலைபேசி எண்களுடன் உள்ளதாக கூறியுள்ளார்.

அதில் 59 எக்செல் படிவங்கள் கொண்ட தொகுப்பில் முழு பெயர்கள், மொபைல் எண்கள், மின்னஞ்சல் முகவரி, நகரங்கள், வருமான நிலைகள் மற்றும் அட்டைதாரர்களின் மின்னஞ்சல் முகவரிகள் உள்ளிட்ட தரவுகள் உள்ளதாகவும், அவர்களின் பான் கார்டு எண்கள், அவர்கள் பணியாற்றும் நிறுவன விவரங்கள், எந்த வகையான வங்கி கணக்கு போன்றவையும் அடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அதிர்ஷ்டவசமான விஷயம் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கு எண் விவரங்கள் இல்லை என கூறியுள்ளார். ஆனாலும் முதலில் அட்டையை பயன்படுத்தி செலவழித்த தொகை பதிவாகியுள்ளதாகவும் கூறியுள்ளார். இதே போல் கடந்த ஆண்டு 13 லட்சம் பேரின் தகவல்கள் டார்க் வெப்பில் விற்பனைக்கு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

டார் வெப் என்பது சிறப்பு மென்பொருள் மூலம் மட்டுமே அணுகக்கூடிய இணையம் ஆகும். பயனர் யார், இணையதள ஆபரேட்டர் யார் என்பதெல்லாம் இதில் ரகசியமாக இருக்கும். பெரும்பாலான சைபர் குற்றங்களுக்கு இந்த டார்க் வெப் உதவுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்