காலைல ஸ்கூல் சாயந்தரம் ஆன்லைன் உணவு டெலிவரி.. வறுமையுடன் போராடிய சிறுவன்.. காரணத்தை கேட்டதும் கைகொடுத்த நிறுவனம்.. கலங்கவைக்கும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் பள்ளி மாணவர் ஒருவர் மாலை நேரங்களில் உணவு டெலிவரி செய்து வருகிறார். இவரது பின்னணியை அறிந்துகொண்ட நிறுவனம் அந்த குடும்பத்தினருக்கு உதவ முன்வந்திருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | 7 வருஷ சர்வீஸ்ல செஞ்ச முதல் தப்பு.. ஊழியரை திடீர்னு வேலையை விட்டு தூக்கிய ஓனர்.. காரணத்தை கேட்டு ஷாக்கான சக பணியாளர்கள்..!

ஆன்லைன் ஆர்டர்

ராகுல் மிட்டல் என்பவர் சமீபத்தில் ஆன்லைன் அப்ளிகேஷன் மூலமாக உணவு ஆர்டர் செய்திருக்கிறார். கொஞ்ச நேரத்தில் உணவும் வந்திருக்கிறது. அப்போது தான் ராகுலுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதற்கு காரணம் அந்த பார்சலை எடுத்து வந்தது ஒரு சிறுவன். இதனால் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்த ராகுல் அந்த சிறுவனிடம் பேச்சு கொடுத்திருக்கிறார். அப்போதுதான் அவருக்கு முழுவிபரமும் தெரியவந்திருக்கிறது.

சிறுவனின் தந்தை ஆன்லைன் உணவு டெலிவரி வேலையில் ஈடுபட்டு வந்திருக்கிறார். சமீபத்தில் அவருக்கு விபத்து ஏற்பட்டதால் அவரால் தனது பணியினை தொடர முடியாமல் போயிருக்கிறது. இதனையடுத்து அவருக்கு பதிலாக அவரது மகனான இந்த சிறுவன் தனது தந்தையின் வேலையை செய்துவந்திருக்கிறார்.

காலையில் பள்ளிக்கு செல்லும் இந்த சிறுவன், மாலையில் வீட்டுக்கு திரும்பியதும் 6 மணிமுதல் இரவு 11 மணிவரையில் ஆன்லைன் உணவு டெலிவரி பணியை சைக்கிளில் மேற்கொண்டு வந்திருக்கிறார். இதன்மூலமாக கிடைக்கும் பணத்தை நம்பியே தனது குடும்பம் இருப்பதாகவும் அந்த சிறுவன் கூறியதை கேட்ட ராகுல் கலங்கிப்போயிருக்கிறார். இதனை தொடர்ந்து இந்த வீடியோவை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் ராகுல். மேலும், அந்நிறுவனத்தினை டேக் செய்து சிறுவனுடைய உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக அவரது குடும்பத்தினருக்கு உதவும்படியும் கோரிக்கை வைத்திருக்கிறார் ராகுல்.

உதவி

ராகுலின் இந்த பதிவில் ஒருவர்," இந்த சிறுவனுடைய விபரங்களை எனக்கு அனுப்புங்கள். கல்வி செலவுகளை நான் ஏற்கிறேன்" என கமெண்ட் செய்துள்ளார். அதேபோல இன்னொருவர்,"சிறுவனுடைய கடின உழைப்பு, பொறுமை, மன உறுதி, உதவும் குணம் இவைகளை படிப்பில் திசை திருப்பினால், அவரால் சமுதாயத்திற்கு எவ்வளவு நன்மை செய்ய முடியும் என்று யோசித்துப் பாருங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, சிறுவனது தந்தை பணிபுரிந்துவரும் நிறுவனம் அவரது குடும்பத்தினருக்கு உதவ முன்வந்திருப்பதாக ராகுல் இன்னொரு ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். மேலும், சிறுவனுடைய தந்தையின் அக்கவுண்ட் அவர் பணிக்கு திரும்பியதும் மீண்டும் ஆக்டிவேட் செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்திருப்பதாக ராகுல் பதிவிட்டுள்ளார். இதனிடையே இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Also Read | காமன்வெல்த் போட்டியில் கலந்துகொண்ட 3 வீரர்கள் தப்பியோட்டம்.?.. உடனடியா எல்லா வீரர்களும் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உத்தரவிட்ட கோச்.. முழுவிபரம்..!

BOY, FOOD DELIVERY BOY, ONLINE FOOD DELIVERY BOY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்