'இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்கள்'... '70 லட்சத்தில் அப்பார்ட்மெண்ட்'... ஒரு நொடி அப்படியே ஷாக் ஆக வைக்கும் வருமானம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்கள், இந்த தலைப்பைப் பார்த்தால் நிச்சம் குழப்பமாகத் தான் இருக்கும். ஆனால் அது தான் உண்மை. சமீபத்தில் இந்தியாவில் பிச்சை எடுத்து பணக்காரர்கள் ஆனவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்தியாவில் பிச்சை எடுப்பது சட்டப்படி குற்றம் என்றாலும், பிச்சை எடுப்பவர்கள் எண்ணிக்கை என்பது எப்போதும் குறைந்தது இல்லை. கடைசியாகக் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் இந்தியாவில் 4 லட்சத்திற்கும் அதிகமான பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள், என தெரியவந்துள்ளது. இந்தியா முழுக்க உள்ள பிச்சை எடுப்பவர்களிடம் 1.5 பில்லியன் டாலர் பணம் புழங்குவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனடிப்படையில் இந்தியாவில் பிச்சை எடுத்து செல்வந்தர்கள் ஆனவர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் Azad Maidan மற்றும் சத்ரபதி சிவாஜி டெர்மினலில் பிச்சை எடுக்கும் 51 வயதான பரத் இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களில் ஒருவராகத் திகழ்கிறார். இவர் மும்பையில் மேற்கண்ட பகுதிகளில் பிச்சை எடுப்பது மூலம் மாதம் 75,000 ரூபாய் சம்பாதிக்கிறார். பரத் சொந்தமாக 75 லட்சம் மதிப்புடைய 2 அடுக்குமாடி வீடுகள் வைத்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

அவருக்கு அடுத்ததாகப் பீகாரின் பாட்னாவில் வசிக்கும் சர்வாதியா தேவி என்ற பெண் பிரபல பிச்சைக்காரியாக இருக்கிறார். இவரின் மாத வருமானம் 50 ஆயிரம் ஆகும்.

அடுத்ததாக மும்பையின் கர் பகுதியில் பிச்சையெடுக்கும் சம்பாஜி பிச்சை எடுப்பதோடு ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். சிலவற்றில் முதலீடுகள் செய்துள்ள இவரிடம் சில லட்சங்களில் வங்கி சேமிப்புகள் உள்ளது.

அதேபோன்று மும்பையில் பிச்சை எடுக்கும் கிருஷ்ணகுமார், தினமும் 1500 ரூபாய் சம்பாதிப்பதோடு 5 லட்சம் மதிப்புடைய சொந்த வீடு ஒன்றை வைத்துள்ளார்.

கொல்கத்தாவைச் சேர்ந்தவர் லட்சுமி தாஸ். இவர் தனது 16 வயதிலிருந்து பிச்சை எடுத்து வருகிறார். இவருக்குச் சராசரியாக மாதம் 30 ஆயிரம் ரூபாய் வருமானம் வருகிறது.

மும்பையின் அந்தேரி பகுதியில் பிச்சை எடுத்து வருபவர் மாசு. இவர் இரவு 8 மணிக்குப் பிச்சை எடுக்கத் தொடங்கி அடுத்த நாள் காலை வரை அதைத் தொடர்கிறார். தினமும் 1000 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை சம்பாதிக்கும் இவர், மேற்கு அந்தேரி பகுதியில் ஒரு படுக்கையறை கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றை வைத்துள்ளார். அதே போன்று கிழக்கு அந்தேரி பகுதியில் சொந்தமாக வீடு ஒன்றும் வைத்துள்ளார்.

இவர்களுக்கு எல்லாம் சிம்ம சொப்பனமாக விளங்குபவர் தான் பாட்னாவைச் சேர்ந்த பப்பு குமார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 1.25 கோடி ரூபாய் ஆகும். இவருக்கு விபத்து ஒன்றில் கால் முறிந்த பின்பு பிச்சை எடுக்கும் தொழிலைச் செய்யத் தொடங்கியுள்ளார். இதற்கிடையே இந்த பட்டியல்களைப் பார்த்து ஷாக் ஆகியுள்ள நெட்டிசன்கள் பலரும், இவர்கள் எல்லாம் ஜிஎஸ்டி கட்டுவார்களா எனக் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்கள்.

மற்ற செய்திகள்