'மகள் பிடிஎஸ் இரண்டாம் ஆண்டு'... 'அதே கல்லூரியில் அப்பா எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு'... 64 வயதில் அசத்திய நபர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாசாதிப்பதற்கும், நினைத்ததை அடைவதற்கும் வயது என்பது எப்போதும் தடை இல்லை என நிரூபித்துள்ளார் 64 வயது நபர் ஒருவர்.
ஒடிசாவின் பர்கார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெய்கிஷோர் பிரதான். இவருக்குச் சிறு வயது முதலே மருத்துவப் படிப்பில் ஆர்வம் இருந்துள்ளது. ஒருமுறை மட்டும் மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதித் தோற்றதால் வாழ்க்கை திசை மாறி அவருக்கு வங்கிப்பணி கிடைத்தது. பணியால் அவரின் மருத்துவ கனவு வெறும் கனவாகவே இருந்ததுள்ளது.
இந்நிலையில் தனது வங்கி பணியிலிருந்து கடந்த 2016ல் அவர் ஓய்வு பெற்ற நிலையில், மீண்டும் தனது மருத்துவ கனவை நிஜமாக்க அவர் திட்டமிட்டார். இதற்காகக் கடந்த 2019ம் ஆண்டு நீட் தேர்வுக்காகத் தினசரி 10 முதல் 12 மணி நேரம் படித்தார். நீட் தேர்வுக்கு வயது வரம்பில்லை என்ற தளர்வு இவருக்கு கை கொடுத்தது. நீட் தேர்வில் வென்று நாட்டிலேயே தனித்துவமான வகையில் எம்பிபிஎஸ் படிப்பிலும் சேர்ந்துள்ளார்.
தனது தந்தைக்குச் செய்த அல்சர் அறுவை சிகிச்சை காரணமாக அவர் கூடுதலாக 30 ஆண்டுகள் வாழ்ந்ததாக நினைவுகூரும் ஜெய்கிஷோர், அந்த தருணத்தில் மருத்துவராக முடிவுசெய்து அதற்காக உழைத்ததாகக் கூறுகிறார். இதில் மற்றொரு சிறப்பு அம்சம் என்னவென்றால், ஜெய்கிஷோர் சேர்ந்துள்ள அதே கல்லூரியில் தான் அவரின் மகள் 2ம் ஆண்டு பல் மருத்துவம் படித்து வருகிறார். எண்ணம் போல வாழ்க்கை என்ற கூற்றை நிஜமாக்கியுள்ளார் ஜெய்கிஷோர் பிரதான்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததும்’... ‘இவங்களுக்குத்தான் முதல்கட்டமாக வழங்க திட்டம்’... ‘தீவிரமாக தயாராகும் பணிகள்’... ‘வெளியான தகவல்’...!!!
- "மருத்துவக் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்!" - முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பு!.. 'திமுக'வுக்கு பதிலடி!
- அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்விக் கட்டணத்தை ‘திமுக’ ஏற்கும்.. மு.க.ஸ்டாலின் ‘அதிரடி’ அறிவிப்பு..!
- மருத்துவ படிப்பு சேர்க்கையில் 'புதிய உள்ஒதுக்கீடு' அறிமுகம்!.. மத்திய அரசு அதிரடி!. வெளியான பரபரப்பு தகவல்!.. முழு விவரம் உள்ளே!
- ‘நீங்க நிருபர்.. என்ன இப்படி தவறா கேக்குறீங்க..?’.. ‘நான் கிராமத்துல இருந்து வந்தவன்’.. ஆவேசமான முதல்வர்..!
- "இன்று என் வாழ்வில் மகிழ்ச்சியான நாள்"... 'மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில்'... 'முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நெகிழ்ச்சி!!!'...
- "நான் கூலி வேலை செய்றேன்"... "கடவுள் செய்யாததை முதல்வர் செய்திருக்கிறார்"!.. கண்ணீருடன் முதல்வர் காலில் விழுந்த மாணவியின் தந்தை!.. நெகிழ்ச்சி சம்பவம்!
- “பையன் NEET-ல பாஸ் ஆயிட்டான்.. எப்படியாச்சும் டாக்டர் ஆக்குங்க ஐயா!”.. மெடிக்கல் சீட்டுக்கு ரூ.57 லட்சம் கொடுத்த தந்தை .. ‘பாதிரியாரும்’ கூட்டாளிகளும் செய்த ‘பலே’ காரியம்!
- VIDEO : '13 பேர் மரணத்திற்கு'... 'உண்மைக் காரணம் யார்?!!'... - 'நீட் தேர்வு விவகாரத்தில் முதலமைச்சர் ஆவேசப் பேச்சு'... 'சட்டப்பேரவையில் காரசார விவாதம்'...!
- 'டாக்டராகும் கனவில் தீ வைக்கிறது நீட்' - சூர்யாவின் பரபரப்பு அறிக்கை. 'இதுல லாஜிக்கே இல்லயே?' - காயத்ரி ராகுராமின் கிடுக்குப்பிடி கேள்வி!