'திடீரென குலுங்கிய அப்பார்ட்மெண்ட்'... 'அதிர்ச்சியில் வெளியே ஓடி வந்த மக்கள்'... 'ரிக்டரில் பதிவான அளவு'... வெளியான வீடியோ காட்சிகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இன்று காலை அசாம் மாநிலத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அசாமில் இன்று காலை 7.51 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆகப் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தின் தாக்கம் வடகிழக்கு மாநிலங்களிலும், வடக்கு வங்காளத்திலும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தின் மையப்புள்ளியானது அசாம் மாநிலத்தின் தேஜ்பூரிலிருந்து 43 கி.மீ தொலைவில் இருந்ததாகக் கணிக்கப்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 17 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் உருவானதாகவும் தேசிய நிலநடுக்க மையம் கண்டறிந்துள்ளது.

நிலநடுக்கம் அசாம், வடக்கு வங்கம் மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் உணரப்பட்டுள்ளது. இதுவரை யாரும் காயமடைந்ததாகத் தகவல் வெளியாகாத நிலையில், விரிசல் ஏற்பட்ட கட்டிடங்களின் புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளன. அசாம் மாநில அமைச்சர் ஹேமந்த் பிஸ்வாஸ் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் நிலநடுக்க சேத புகைப்படங்கள் சிலவற்றைப் பகிர்ந்துள்ளார்.

இதற்கிடையே பூமிக்குக் கீழ் 10கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்க மையம் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது வரும் செய்திகளின் படி பின்னதிர்வுகளும் அசாமில் ஏற்பட்டுள்ளன. சிக்கிமில் தலைநகர் காங்டாக்கில் கடந்த வாரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் 5.4 என்று பதிவானது. இப்போது அசாமில் ஏற்பட்டுள்ளது, இந்த இரண்டுக்கும் தொடர்பிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்