இதுவரைக்கும் 600 பேர் Missing.. உள்ள போனா திரும்ப வர்றது ரொம்ப கஷ்டம்.. இந்தியாவுல இப்படி ஓரு காடா?
முகப்பு > செய்திகள் > இந்தியாலோனாவாலா காட்டுப் பகுதிக்கு சுற்றுலா சென்ற டெல்லியை சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போனதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அடர்ந்த காடு
மஹாராஷ்டிரா மாநிலத்தின் புனே அருகே அமைந்துள்ளது லோனாவாலா காடுகள் பகுதி. தக்காண பீடபூமிக்கும் கொங்கன் கடற்பகுதிக்கும் இடையே அமைந்துள்ளது இந்த காடுகள். இதில் உள்ள இரண்டு மலைகள் சுற்றுலாவாசிகளை அதிகளவில் கவர்ந்து இழுக்கிறது. பருவமழை காலங்களில் இந்த காடுகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிப்பது வழக்கம். மேலும், இங்குள்ள குகைகள் மிகவும் பிரபலமானவை. ஆனால், இந்த காடுகளுக்கு இன்னோர் முகமும் உண்டு என்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள்.
2005 ஆம் ஆண்டிலிருந்து..
டெல்லியை சேர்ந்த இர்ஃபான் ஷா என்னும் 24 வயது இளைஞர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்த காட்டு பகுதிக்கு தனியாக ட்ரெக்கிங் சென்றுள்ளார். அப்போது அவர் காணாமல் போனதாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஷா-வை மீட்க உள்ளூர் அமைப்பு ஒன்றுடன் இணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிக்கலான புவியியல் அமைப்பு, அடர்த்தியான காட்டுப் பகுதி ஆகியவற்றின் காரணமாக இந்த லோனாவாலா காடுகளுக்கு வரும் பயணிகளில் சிலர் அவ்வப்போது காணாமல்போவதுண்டு. அப்படி கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து தற்போதுவரை 600 பேர் இந்த காடுகளில் தொலைந்து போனதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.
கடைசி தகவல்
பொறியாளரான இர்ஃபான் ஷா தனது சகோதரருக்கு அனுப்பிய கடைசி தகவலில், தன்னிடம் உள்ள தண்ணீர் தீர்ந்துவருவதாக தெரிவித்திருக்கிறார். அதனுடன், தனது லொக்கேஷனையும் அவர் அனுப்பியுள்ளார். அதனடிப்படையில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்த்தப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இதுகுறித்துப் பேசிய போலீஸ் அதிகாரி சீதாராம் தூபால்,"இந்த நிலப்பரப்பின் தன்மை அறியாமல் இங்கே பயணம் மேற்கொள்ளும் நபர்கள் காணாமல்போவது வழக்கம். இருப்பினும் டியூக் பாய்ண்ட் பகுதியில் இருந்து ஒருவர் காணாமல் போவது இதுவே முதல்முறையாகும். வழிகாட்டிகள் இல்லாமல் இந்த காடுகளை சுற்றிப்பார்க்க தனியாக செல்லவேண்டாம் என சுற்றுலாவாசிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது" என்றார்.
கடந்த ஒரு வருடத்தில் இந்த மலைப் பகுதியில் இருந்து 100க்கு மேற்பட்ட சடலங்களை மீட்டுள்ளதாக கூறுகிறார் உள்ளூர் மீட்பு அமைப்பான ஷிவ்துர்க்-ன் தலைவர் ஆனந்த் கவதே. இந்நிலையில், டெல்லியை சேர்ந்த இளம் பொறியாளர் ஒருவர் லோனாவாலா பகுதியில் காணாமல்போன சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஏர்போர்ட்ல இருந்து கிளம்பிய கொஞ்ச நேரத்துல விமான எஞ்சினில் ஏற்பட்ட சிக்கல்..கலவரமான கண்ட்ரோல் ரூம்.. பைலட் எடுத்த அவசர முடிவு..!
- "ஒழுங்கா சேலை கட்டத் தெரியல".. மனைவி மீது வந்த கோபம்.. லெட்டர் எழுதி வச்சுட்டு கணவர் செஞ்ச விபரீத காரியம்..!
- பொண்ணோட செல்போனுக்கு வந்த லிங்க்.. கூடவே ஒரு மெசேஜ்.. கிளிக் பண்ணதும் காத்திருந்த ஷாக்.. பரபரப்பு சம்பவம்..!
- போலீஸ் தேர்வில் 200க்கு 171 மார்க் எடுத்த இளம்பெண்.. மெடிக்கல் டெஸ்ட்ல 'ஆண்' என வந்த ரிசல்ட்.. உயர்நீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு தீர்ப்பு..!
- கல்யாணம் முடிஞ்ச 3-வது நாள் புதுமணப்பெண் செஞ்ச காரியம்.. அதிர்ந்துபோன மாமனார்.. போலீஸில் பரபரப்பு புகார்..!
- அப்படி போடு..மேக்ஸ்வெல் - வினிராமன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் செம்ம டான்ஸ் ஆடிய விராத் கோலி!
- ‘எண்ணி முடிக்கவே பல மணிநேரம் ஆச்சு’.. தோண்ட, தோண்ட கட்டுக்கட்டாக பணம், வெள்ளி.. IT ரெய்டில் அதிகாரிகளை அதிரவைத்த தொழிலதிபர்..!
- முந்திரி காட்டில் கிடந்த இளம்பெண் சடலம்.. கனக்கச்சிதமாக ‘மோப்பநாய்’ நின்ற இடம்.. திடுக்கிட வைத்த தகவல்..!
- KKR பேட்ஸ்மேனுக்கும், RR பவுலருக்கும் இடையே நடந்த வாக்குவாதம்.. மேட்ச் ரொம்ப பரபரப்பாக இருந்திருக்கு போலயே..!
- “இதுதான் என் அப்பா, அம்மா சொல்லிக் கொடுத்த இந்தியா”.. Uber டிரைவருக்காக பெண் செய்த செயல்.. நெகிழ்ச்சி சம்பவம்..!