‘25 வருஷமா இப்டிதான் பண்ணிட்டு இருக்காரு’.. ஆற்றில் குதித்த பூசாரி’.. 2 நாள் கழித்து நடந்த அதிசயம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆற்றுக்குள் குதித்த முதியவர் இரண்டு நாட்களுக்கு பின் மீண்டும் வீடு திரும்பிய சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. பலர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெங்கடேஷ் என்ற 60 வயது பூசாரி ஒருவர் கரைபுரண்டு ஓடும் கபிலா என்னும் ஆற்றில் குதித்துள்ளார். ஆற்றில் நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர் பிழைக்க வாய்ப்பு இல்லை என அப்போது செல்போனில் வீடியோ எடுத்தவர்கள் நினைத்துள்ளனர். ஆனால் வெங்கடேஷ் இரண்டு நாட்களுக்கு பிறகு வீடு திரும்பியுள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வெள்ள நீரில் குதித்ததில் தான் சோர்ந்து போய்விட்டதாகவும், அதனால் ஹெஜ்ஜிஜ் என்ற பாலத்தின் கீழ் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு வந்ததாகவும் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தெரிவித்த வெங்கடேஷின் சகோதரி,  ‘இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அவர் ஆற்றுக்குள் குதித்து மீண்டும் வீட்டிற்கு வருவதை 25 வருடங்களாக செய்து வருகிறார். அவர் மறுபடியும் வீட்டிற்கு வருவார் என எனக்கு தெரியும்’ என தெரிவித்துள்ளார்.

KARNATAKAFLOODS, MISSING, OLDMAN, RIVER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்