'கொதிக்கும் சூடான சாம்பார் பாத்திரம்'.. விழுந்து துடித்த யுகேஜி குழந்தைக்கு நொடியில் நேர்ந்த சோகம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திர மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளியில் UKG வகுப்பு மாணவன் சாம்பார் அண்டாவுக்குள் தவறுதலாக விழுந்ததால் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவின் கர்னூல் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் ஹாஸ்டலில் தங்கி பயின்று வந்த 6 வயது UKG வகுப்பு மாணவன் மதிய உணவு இடைவேளையின் போது சாப்பிடுவதற்காக வரிசையில் நிற்க வைக்கப்பட்டுள்ளான்.
அப்போது சிறுவன் வரிசையில் நில்லாமல் அங்கும் இங்குமாக நகர்ந்து விளையாண்டுக்கொண்டிருந்ததாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அங்கு சூடாக கொதிக்க கொதிக்க சாம்பார் அண்டாவை சமையலர்கள் கொண்டுவந்து வைத்துள்ளனர்.
விளையாட்டு பிள்ளைப் பருவத்தில் இருந்த சிறுவன் தெரியாமல் ஓடும்போது கொதிக்க கொதிக்க இருந்த சூடான பெரிய சாம்பார் பாத்திரத்துக்குள் விழுந்து துடிதுடித்து அலறியுள்ளான். இதனையடுத்து சிறுவன் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் இருந்த கர்னூல் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.
ஆனால் சிகிச்சைப் பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘2 ரூபாய்க்கு நடந்த சண்டை’.. ‘கம்பியால் அடித்த நபர்’.. சுருண்டு விழுந்த இளைஞர்..!
- 'ஓடும் காரில் வைத்து ஒரு மணி நேரம்..'.. இரவுப்பணி முடிந்து திரும்பிய சிறுவனுக்கு 6 இளைஞர்களால் நேர்ந்த கொடூரம்!
- '17 வயது சிறுவனை.. 20 முறை பலாத்காரம்'.. 'மகன் என்று சொல்லி ஏமாற்றிய 41 வயது பெண்'.. பதறவைத்த சம்பவம்!
- ‘அவருக்காக எல்லாத்தையும் விட்டேன் ஆனா இப்போ’.. ‘காதல் கணவரின் செயலால்’.. ‘அதிர்ச்சியில் கலங்கி நிற்கும் இளம்பெண்’..
- 'நம்பர் பிளேட்ல இப்படிலாமா எழுதி வெப்பாங்க?.. அது சரி நம்பர் எங்க?'.. 'டிராஃபிக் போலீஸிடம்' சிக்கிய நபர்!
- ‘நோ இண்டெர்வியூ’ ‘மார்க் மட்டும் போதும்’ அரசுப்பணியில் அதிரடி மாற்றம்..! மாஸ் காட்டிய ஜெகன்மோகன்..!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- ‘ஒரு கிலோ மீட்டர் தொலைவில்’.. ‘அடுத்தடுத்து கிடைத்த 4 சடலங்கள்’.. ‘போலீஸாரை அதிரவைத்த சம்பவம்’..
- ‘சுற்றுலா சென்ற இடத்தில்’.. ‘வேன் கவிழ்ந்து’.. ‘நொடிப்பொழுதில் நடந்து முடிந்த கோர விபத்து’..
- ‘என் திட்டங்களை அவர் நிறைவேற்றுகிறார்’.. ‘ஜெகன் மோகன் ரெட்டி குறித்து சீமான் கருத்து’..