“ஒரு வார்டுல இருந்து இன்னொரு வார்டுக்கு போக பணம் கேக்குறாங்க”.. நோயாளியின் ஸ்ட்ரெச்சரை தள்ளும் 6 வயது சிறுவன்!.. விமர்சனத்துக்கு உள்ளாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனை ஒன்றில்தான் 6 வயதுச் சிறுவன் ஒருவன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, தனது தாத்தாவை ஒரு வார்டில் இருந்து இன்னொரு வார்டுக்கு, தனது தாயுடன் இணைந்து ஸ்ட்ரெச்சரை தள்ளிச் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை
அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. உ.பியின் பர்காஜ் மாவட்டத்தில் உள்ள கவுரா கிராமத்தைச் சேர்ந்தவர் சேதி யாதவ். உடநிலை சரியில்லாத இவரை, அண்மையில் இவரது மகள் இவரை மருத்துவமனையில் சேர்த்து, கவனித்துவருகிறார். இவரது மகனும் இவரும்தான் சேர்ந்து இழுத்துச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக வெளியான வீடியோவில் ஸ்ட்ரெச்சரை சிறுவனின் தாய் முன்பக்கம் இருந்து இழுத்துக்கொண்டு போக, சிறுவன் பின்னால் இருந்து ஸ்ட்ரெச்சரை தள்ளிச் செல்கிறார். இதுபற்றி அவர்கள் கூறும்போது, ஒவ்வொரு முறையும் ஸ்ட்ரெட்ச்சரை வேறு வார்டுக்கு மாற்றும்போது மருத்துவமனை வார்டு ஊழியர் 30 ரூபாய் கேட்பதால், தானும் தன் மகனும் சேர்ந்து ஸ்ட்ரெச்சரை இழுத்துச் செல்ல வேண்டியிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சிறுவனின் வீடியோவைப் பார்த்த அந்த மாவட்ட மேஜிஸ்திரேட் அமித் கிஷோர், நேரடியாக மருத்துவமனைக்குச் விசாரணை நடத்தியதுடன், பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களையும் நேரில் பார்த்து விபரம் கேட்டறிந்துள்ளார். பின்னர் குற்றம் சாட்டப்பட்ட வார்டு ஊழியரை பணிநீக்கம் செய்ததுடன், இது தொடர்பான முழு அறிக்கையை சமர்ப்பிக்கவும் மருத்துவமனைக்கு உத்தரவிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “எனக்கு அது வேணும்.. அந்த ரூம திறக்க போறியா இல்லயா?”.. 'மருத்துவமனை' பணியாளருக்கு 'கத்திமுனையில்' நேர்ந்த 'பயங்கரம்'!
- “96 மணி நேரம்.. 4 பகல்.. 3 இரவு”.. லிப்டில் சிக்கிக் கொண்ட தாயும் மகளும் உயிர்வாழ்வதற்காக செய்த ‘அதிரவைக்கும்’ காரியம்!
- VIDEO: "முருகனோட 'வேல' பத்தி என்ன தெரியும் உங்களுக்கு?.. வேலுக்கு பின்னாடி இருக்கும் அறிவியல் 'இது' தான்"!.. வெளிநாட்டுப் பெண் 'பளார்' பதில்!
- அடப்பாவிகளா...! இங்கேயுமா...? 'கொரோனா வார்டில் 15 வயசு சிறுமியை...' 'பாத் ரூமுக்குள்ள கூட்டிட்டு போய்...' - பாலியல் வன்கொடுமை செய்த செக்யூரிட்டி...!
- சுனாமி, வெள்ளம், புயல் மட்டுமில்ல... கொரோனாவையும் 'அசால்ட்டா' டீல் செய்யும் சென்னை... உண்மையிலேயே இது 'ஸ்வீட்' நியூஸ் தான்!
- “இறந்துட்டாரு.. இனி ஒன்னும் பண்ண முடியாது!”.. உறுதி செய்த ஹாஸ்பிடல்.. “மார்ச்சுவரி” சென்று பார்த்த மகளுக்கு காத்திருந்த ‘இன்ப அதிர்ச்சி’!
- ’ஒரே ஒரு ’வாட்ஸ்ஆப்’ மெசேஜில்... '84 நர்ஸ்களை ’வேலையை’ விட்டு தூக்கிய மருத்துவமனை...!' இந்த மாதிரி நேரத்துல ஏன் தூக்கினாங்க...? - அதிர்ச்சியில் செவிலியர்கள்...!
- கொரோனா பரிசோதனை குச்சியை மூக்கில் விடும்போது விபரீதம்!.. பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த சோகம்.. இந்தியாவை உலுக்கிய சம்பவம்!
- “இது கொரோனா பார்ட்டி.. என்ஜாய் பண்ணுங்க.. எப்படி கொரோனா வருதுனு பாத்துடுவோம்!”.. ‘இளைஞருக்கு நேர்ந்த சோகம்’.. நாட்டையே அதிரவைத்த சம்பவம்!
- ‘சினிமா க்ளைமேக்ஸை’ மிஞ்சும் ‘திக்..திக் நிமிடங்கள்!’.. விகாஸ் துபே ‘என்கவுண்டர்!’ நடந்தது எப்படி?.. சர்ச்சையைக் கிளப்பும் கேள்விகள்!