Video: திருப்பதியில் ‘கோயில்’ வாசல் முன்பு... நொடியில்... ‘முதியவர்’ எடுத்த விபரீத முடிவு... பதறவைத்த ‘சிசிடிவி’ காட்சிகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பால் ஏற்றி வந்த லாரியின் பின்பக்க டயரின் முன் விழுந்து முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில்,  சாமிக்கு அபிஷேகம் செய்வதற்காக கேன்களில் இருந்த பாலை லாரி ஒன்று இன்று காலை ஏற்றி வந்தது. பின்னர், அந்த பால்களை வழங்கிவிட்டு, காலி கேன்களுடன் லாரி  சென்றுக் கொண்டிருந்தது. கோயில் வாசல் முன்பு லாரி திரும்பி வந்தபோது, அதன் எதிர்புறத்தில் 55 வயது முதியவர் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அவர், லாரியின் முன்பக்க டயர் மற்றும் பின்பக்க டயருக்கும் உள்ள இடைவெளியில் போய் விழுந்தார். இதில் கண் இமைக்கும் நேரத்தில்  லாரியின் பின்சக்கரம் ஏறி இறங்கியது. இதனைப் பார்த்து அங்கிருந்தவர்கள் பதறிப்போய் கத்தினர். உடனடியாக லாரி நிறுத்தப்பட்டது. எனினும் அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, அங்கிருந்த அதிகாரிகள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார்,  உயிரிழந்த முதியவரின் உடலை கைப்பற்றியதுடன், அவர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

SUICIDE, MAN, OLD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்