'லாக்டவுன்' நேரத்திலும் 'வேலை பார்த்த'... 'பத்திரிகையாளர்கள்' 53 பேருக்கு 'கொரோனா...' பலருக்கு 'ரிசல்ட்' வர வேண்டியுள்ளதால்...'எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு...'
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவிலேயே கொரானா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மஹாராஷ்ட்டிராவில் பத்திரிகையாளர்கள் 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசால் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 500 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். இந்நிலையில் நேற்று தமிழகத்தில் 2 பத்திரிகையாளர்கள் கொரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. மேலும், தொலைகாட்சி நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய உதவி ஆசிரியர் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவை பொறுத்தவரை கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மஹாராஷ்ட்ரா உள்ளது. இங்கு இது வரை 4 ஆயிரத்து 203 பேர் கொரோனாவால் பாதிக்கபபட்டுள்ளனர். இதில் 223 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று மஹாராஷ்ட்டிராவில் பத்திரிகையாளர்கள் 53 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஒரு சில பத்தரிகையாளர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மும்பை மற்றும் இதனை ஒட்டிய பகுதிகளில் பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு பரிசோதனை மையம் அமைக்க முதல்வர் உத்தவ் தாக்ரே உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மும்பை மாநகராட்சி சார்பில் மும்பை பத்திரிகையாளர் மன்றம் அருகே முகாம் அமைக்கப்பட்டது. இதில் 171 பேருக்கு கடந்த ஏப்ரல் 16, 17 ஆகிய தேதிகளில் பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் 30 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்ப்பட்டிருப்பதாக மாநகரடச்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதையடுத்து, இன்று 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலருக்கு ரிசல்ட் வர வேண்டியுள்ளதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா அறிகுறி உள்ள செய்தியாளர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனாவில் செய்தியாளர்களில் பெரும்பாலானோர், நிருபர்கள்,
கேமராமேன்கள், ஆவர். இவர்கள், டிவி., எலக்ட்ரானிக் மீடியா மற்றும் செய்தித்தாள் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கடைசில 'தண்ணி'யையும் இந்த 'கொரோனா' விட்டு வைக்கல போல... 'எந்த' நாட்டுலன்னு பாருங்க!
- 'என்ன இவருக்கு கொரோனா இல்லயா!?'... கொரோனா சிகிச்சை வார்டில் குழப்பம்... அசந்த நேரத்தில் அரங்கேறிய விபரீதம்!.. பதறவைக்கும் பின்னணி!
- கொரோனா காலத்திலும் 'பாதுகாப்பான' 40 நாடுகள்... டாப் 10-க்குள் வந்த 'சீனா'... இந்தியாவுக்கு இடமில்லை!
- 'பிரிட்டனும்' தடுப்பு மருந்தை 'கண்டுபிடித்தது...' 'முதல்கட்ட' சோதனை 'வெற்றி'.... 'அடுத்தக்கட்ட' சோதனை 'தீவிரம்...'
- கொரோனா எதிரொலி!.. 2021ம் ஆண்டு வரை... அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம்!.. முழு விவரம் உள்ளே
- "வைரஸ் தானா பரவுச்சா?..." "இல்ல பரப்புனாங்களா?..." 'சீனாவுக்கு' நேரா போனாதான் 'தெரியும்...' 'அதிபர்' ட்ரம்பின் அதிரடி 'முடிவு...'
- தமிழகத்தில் 'பள்ளிகள்' திறப்பு... மேலும் 'தள்ளிப்போக' வாய்ப்பு... என்ன காரணம்?
- ‘கடைசி நோயாளியும் குணமாகிட்டாரு’.. இங்க யாருக்கும் ‘கொரோனா’ பாதிப்பு இல்லை.. ‘முதலாவதாக’ அறிவித்த மாநிலம்..!
- "பசிக்குதுனு பிஸ்கட் வாங்கப் போனான்!".. 'ஊரடங்கை' மீறியதாகக் கூறப்படும் 22 வயது 'இளைஞருக்கு' நேர்ந்த 'சோகம்'.. கதறி அழும் தந்தை! வீடியோ!
- கொரோனாவால் உயிரிழக்கும் மருத்துவர்கள்!.. உச்சகட்ட கோபத்தில் அரசு மருத்துவர்கள் சங்கம்... அடுத்தடுத்த அதிரடி முடிவு!.. என்ன காரணம்?