'சொந்த ஊரைத் தேடி 500 கி.மீ நடைபயணமாக நடந்த தமிழக வாலிபர்...' 'திடீரென்று மயங்கி கீழே விழுந்தார், உடனே...' உயிரிழந்த நிலையில் வீடு திரும்பிய சோகம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தமிழகம் வர 500 கி.மீ நடைபயணம் மேற்கொண்ட 21 வயது இளைஞர் வரும் வழியிலேயே உயிரிழந்த சம்பவம் சக பயணிகளையும், அவரது குடும்பத்தாரையும் சோகத்தில் அழ்த்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த லோகேஷ் பாலசுப்ரமணி (21), மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வேலை செய்து வருகிறார். தற்போது கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் 144 ஊரடங்கு சட்டம் பின்பற்றப்படும் நிலையில் எந்த போக்குவரத்து துறையும் செயல்படவில்லை முக்கியமாக இந்தியாவில் குறிப்பிட்ட சில மாநிலங்கள் தங்கள் எல்லைகளையே மூடியுள்ளது.
இதனால் சொந்த ஊரிலிருந்து மற்ற மாநிலங்களுக்கு கூலி தொழில் செய்ய சென்ற தொழிலாளர்கள் அத்தியாவசிய தேவைகள் சரிவர கிடைக்க பெறாமல் கவலை அடைந்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு சிலர் சாலையின் வழியே நடை பயணமும் மேற்கொண்டு வருவதை நாம் பார்க்கிறோம்.
இந்நிலையில் வெளி மாநிலங்களில் வேலை செய்து வந்த தமிழகத்தை சேர்ந்த 26 பேருடன்
லோகேஷும் நாக்பூரில் இருந்து சுமார் 500 கிலோமீட்டர் தூரம் தனது சொந்த ஊரான நாமக்கல்லுக்கு நடை பயணம் மேற்கொண்டுள்ளார்.
தற்போது நிலவி வரும் கோடைகால வெயிலில் 3 நாட்கள் 500 கி. மீ நடந்து வந்த லோகேஷ், நேற்று முன்தினம் இரவு (புதன்கிழமை) தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் வந்தடைந்தார். அவருடன் பயணித்த அனைவரும் அங்கு உள்ள சமுதாய நலக்கூடத்தில் இரவு தங்கியுள்ளனர். மிகவும் களைப்படைந்த நிலையில் காணப்பட்ட லோகேஷ் சக பயணிகளுடன் முகாமில் உள்ள ஒரு இருக்கையில் அமரும் போது நிலைகுலைந்து மயங்கி கீழே விழுந்தார்.
அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் உடனடியாக மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த டாக்டர் லோகேஷை பரிசோதனை செய்து அவர் உயிரிழந்துவிட்டார் என கூறியுள்ளார். எதிர்பாராத இந்த சம்பவத்தால் அவருடன் பயணித்த பயணிகள் அதிர்ச்சியில் உரைந்தனர்.
இதையடுத்து இந்த நிகழ்வு பற்றிய விவரங்கள் உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டு, உயிரிழந்த லோகேஷ் பால சுப்ரமணியின் உடலை அவரது சொந்த ஊரான நாமக்கலுக்கு கொண்டு செல்லபட்டது.
தனது சொந்த ஊரை அடைய வேண்டும் என 500 கிலோமீட்டர் பயணம் செய்த லோகேஷ் பாலசுப்ரமணியம் இறுதியில் உயிரிழந்த நிலையில் தனது ஊருக்கு திரும்பிய சம்பவம் நாமக்கல் மாவட்ட மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '14 லட்சம் இட்லி..'. '9 லட்சம் சப்பாத்தி...' '9 லட்சம் சாப்பாடு...' '30 லட்சம் பேருக்கு உணவு...' 'உலகின் மிகப்பெரிய உணவகம்...!'
- ‘20 வருஷமா ராணுவத்துல இருக்காரு’.. ‘அவருக்கு இப்டி ஆனதை யாராலையும் தாங்கிக்க முடியல’.. கதறியழுத குடும்பம்..!
- 'விராட் கோலி'யின் 'தலைமுடியை'... 'கொத்தாக' பிடிக்கும் 'தைரியம்'... 'அனுஷ்கா சர்மாவுக்கு' மட்டுமே 'உண்டு'...
- '135 கி.மீ.,' உணவின்றி நடந்தே சென்ற 'கூலித் தொழிலாளி...' 'ஊரடங்கு' உத்தரவு காரணமாக.... 'போக்குவரத்து' முடக்கப்பட்டதால் 'நேர்ந்த பரிதாபம்'...
- 'தமிழ்த்தாய் வாழ்த்து சொல்லிட்டா நீங்க கிளம்பலாம்...' 'தெரியாமல் திருதிருவென முழித்த இளைஞர்கள்...' ஊரடங்கை மீறுவோருக்கு நூதன எச்சரிக்கை...!
- ‘எங்க பசியாத்த யாரும் வரமாட்டாங்களான்னு நெனச்சேன்’.. ‘கண் கலங்கிய முதியவர்’.. ஊரடங்கில் உருகவைத்த இளைஞர்கள்..!
- ‘புள்ள பெத்துக்கவே 10 மாசம் ஆகுது’.. 20 நாள் வீட்ல இருக்க முடியாதா?.. ‘எங்களுக்காக இத மட்டும் பண்ணுங்க’.. தூய்மை பணியாளர்கள் உருக்கமான வேண்டுகோள்..!
- 'வெளிநாட்டுல' இருந்து 'காப்பாத்துங்கன்னு' சொன்னவங்க எல்லாம்... இப்போ 'ஊட்டிக்கு டூர்' வந்த மாதிரி 'சுத்துறாங்க'... 'பொறுத்து பொறுத்துப்' பார்த்த 'போலீஸ்' செய்த 'காரியம்'...
- ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே திரிந்த மக்கள்.. தண்ணீரை பீய்ச்சி விரட்டிய அதிகாரிகள்..!
- ‘21 நாட்கள்’ ஊரடங்கால்... பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்களின் ‘சேவை’ நிறுத்தமா?... ‘விவரங்கள்’ உள்ளே...