'சமூக வலைதளங்களில்’... ‘சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டால்’... ‘5 ஆண்டுகள் சிறை’... ‘அவசர சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் வாங்கிய மாநிலம்’...!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாசமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தால், 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கக் கூடிய அவசர சட்டத்திற்கு கேரள ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதுகுறித்து கேரள ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்ததாவது, இணையம் வழியாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களிலிருந்து அவர்களை பாதுகாக்கும் வகையில், கேரள அரசு போலீஸ் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு உள்ளது. இந்த அவசர சட்டத் திருத்தத்துக்கு ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.
கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு அண்மையில் பணிக்கு திரும்பிய நிலையில் அவர், இந்த அவசர சட்டத்தில் கையொப்பமிட்டுள்ளார் என கேரள ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், தனிநபர் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் விதமாக சமூக வலைதளங்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதை தடுப்பதற்காகவே இந்த அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
அதாவது இந்த அவசரச் சட்டத்தின் மூலம் சமூக வலைதளங்கள் வாயிலாக எந்த ஒரு நபரையும் உள்நோக்கத்துடன் மிரட்டல் அவமதிப்பு அல்லது அவதூறு செய்பவருக்கு, 5 ஆண்டுகள் சிறை அல்லது ரூபாய் 10,000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தோ தண்டனையாக விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது அங்கு சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த அவசரச் சட்ட திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.
இந்தச் சட்டம் கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதுடன் காவல்துறை கைகளில் அதிக அதிகாரங்களை குவிக்க உதவும் எனக் கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டை கேரள முதல்வர் நிராகரித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தேதியை குறிச்சு வச்சுக்கோங்க'... 'பட்டையை கிளப்பிய கேரள ஜோடி'... வைரலாகும் திருமண போட்டோ ஷூட் புகைப்படங்கள்!
- 'நம்பினா நம்புங்க!'.. இதுவும் Pre-wedding Shoot தான்! பரவும் போட்டோஸ்.. ‘பட்டையை கிளப்பிய தம்பதி!’
- ‘குடும்பம் வேற, கட்சி வேற’.. தேர்தலில் அம்மாவை எதிர்த்து மகன் போட்டி.. எகிறும் எதிர்பார்ப்பு..!
- “மிச்சத்த அங்க பேசலாம் வாங்க!”.. ‘மயக்கும்படி பேசி.. சொகுசு ஹோட்டலுக்கு வர சொன்ன இளம்பெண்’.. நம்பி போன இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
- 'தயவு செஞ்சு 'நீங்கெல்லாம்' ஜெயிலுக்கு வராதீங்க... போயிடுங்க!'.. கைதிகளுக்கு அதிர்ச்சி அளித்த அரசு!.. சிறைச்சாலையில் இப்படி ஒரு சிக்கலா?
- “குடும்பத்தச் சேர்ந்தவங்க வாட்ஸ் ஆப் குரூப்ப விட்டே போய்ட்டாங்க! ஃபோட்டோக்களை நீக்க சொல்றாங்க! ஆனால்..”.. சர்ச்சை போட்டோஷூட் விவகாரத்தில் புதுப்பெண் கூறிய ‘அதிரடி பதில்!’
- 'இங்க தான் இருந்துச்சு’... ‘பூங்காவில் இருந்து திடீரென மாயமான புலி’... ‘அச்சத்தில் உறைந்திருக்கும் மக்கள்’...!
- 'அவளோட பேச்சுல மயங்கிட்டேன்'... 'தனியாக சந்திக்க அழைத்ததும் எதுவும் யோசிக்காமல் சென்ற இளைஞர்'... வாழ்க்கையில் மறக்க முடியாத அளவுக்கு நடந்த சம்பவம்!
- 'புயலை விட மோசமாக மும்பை.. பெங்களூரு என இப்போது கேரளா வரை டிராவல் ஆகும் போதைப்பொருள் சப்ளை விவகாரம்!'.. அதிர்ச்சி தரும் உண்மைகள்.. அடுத்து நடக்கவுள்ள திருப்பங்கள்!
- 'எனக்கு வந்த திருமண வரனை தடுத்தது அந்த ஆளு தான்'... 'பக்கத்து வீட்டுகாரர் மீது செம காண்டான 90ஸ் கிட்'... ஆத்திரத்தில் செய்த பகீர் சம்பவம்!