‘இந்த 5 மாநிலங்களில் தான்’... ‘கொரோனா வைரஸ் பரவல் அதிகம்’... ‘மத்திய சுகாதாராத்துறை வெளியிட்ட தகவல்’...!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை பொறுத்தவரையில் 5 மாநிலங்களில் மட்டும் 56 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது, 'இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26,382 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 99,32,548 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 94,56,449 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 33,813 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,32,002 லட்சமாகக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் 387 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 1,44,096 ஆக அதிகரித்துள்ளது. உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், சத்தீஸ்கர், கேரளா, மகாராஷ்டிரா ஆகிய 5 மாநிலங்களில் மட்டும் 56 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்