18 வருஷத்துக்கு அப்பறம் வானில் நடக்க இருக்கும் அற்புதம்.. இனிமே 2040 ல தான் இப்படி நடக்குமாம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சூரிய குடும்பத்தில் உள்ள 5 கோள்கள் இன்று முதல் ஒரே நேர்கோட்டில் வர இருப்பதாக விண்வெளி ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.

Advertising
>
Advertising

விண்வெளி எப்போதும் பல்வேறு ஆச்சர்யங்களை நமக்கு அளிக்க தவறுவதில்லை. சூரிய குடும்பம், கோள்கள், விண்கற்கள், கருந்துளைகள், கோடிக்கணக்கான விண்மீன்கள் என நம்முடைய கற்பனைக்கும் அப்பாற்ப்பட்ட பல விஷயங்களை கொண்டிருக்கும் விண்வெளி மீண்டும் ஒரு அற்புத காட்சியை நமக்கு காட்ட இருக்கிறது. 18 வருடங்களுக்கு பிறகு, சூரிய குடும்பத்தை சேர்ந்த ஐந்து கோள்கள் ஒரே நேர்கோட்டில் இணைய இருக்கின்றன.

5 கோள்கள்

பொதுவாக இரண்டு அல்லது மூன்று கோள்கள் ஒரே நேர்கோட்டில் அமைவதை நாம் பார்த்திருப்போம். இது வழக்கமான ஒன்றுதான். ஆனால், இன்று முதல் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய 5 கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கின்றன. இந்த அரிய நிகழ்வு வரும் 27 ஆம் தேதிவரையில் தொடரும் என வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடைசியாக கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இவ்வாறு 5 கோள்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

பூமியின் வடக்கு அரைக்கோள பகுதிகளில் சூரிய உதயத்திற்கு 45 முதல் 90 நிமிடங்களுக்கு இடையில் இக்காட்சி தென்படும். மலை போன்ற உயரமான இடத்திலிருந்து கிழக்கு நோக்கி அடிவானத்தில் பார்த்தால் இதனை பார்க்கலாம். அதிகாலையில் மரங்கள் கட்டிடங்கள் மறைக்காத இடத்தில் இருந்து பார்த்தால் கோள்களை எளிதில் கண்டறியலாம்.

இனி 2040 ல தான்

இந்த அரிய நிகழ்வு இனி 2040 ஆம் ஆண்டில் தான் தெரியும் எனவும் இந்த கிரகங்களை மக்கள் வெறும் கண்ணால் பார்க்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுபற்றி பேசிய பிரபல விண்வெளி ஆய்வாளரான பேராசிரியர் லூசி கிரீன்," கோள்கள் அடிவானத்திற்கு அருகாமையில் இருந்து விரிக்கப்பட்ட முத்துகளின் சரம் போல் தோன்றும்" என்றார்.

தென் அரைக்கோளத்தில் உள்ளவர்கள் வட அரைக்கோளத்தில் உள்ளவர்களை விட கிரகங்களின் அமைப்பை எளிமையாக பார்க்க முடியும். பெரும்பாலான கிரகங்கள் ஜூன் முழுவதும் இதேபோன்ற பிரகாசத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் என்கிறார்கள் விண்வெளி ஆய்வாளர்கள்.

PLANETS, SPACE, SKY, கோள்கள், கிரகங்கள், விண்வெளி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்