‘மாயமான’ இளம்பெண்... சர்ஜிக்கல் ‘பிளேடால்’ சிக்கிய ‘இளைஞர்கள்’... ‘5 பேர்’ சேர்ந்து செய்த ‘உறையவைக்கும்’ காரியம்...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆந்திராவில் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் திஷா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் இளம்பெண் ஒருவர் கடந்த ஜனவரி 5ஆம் தேதி வீட்டருகே உள்ள கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார். இரவு 8 மணியளவில் வெளியே சென்ற அந்தப் பெண் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார். அந்த நேரத்தில் மழை பெய்துகொண்டிருந்ததால் சிறிது நேரத்தில் வந்துவிடுவார் என நினைத்த குடும்பத்தினர், பின்னரே அவரைத் தேட ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து அதிகாலையில் அதே பகுதியில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இருந்து அந்தப் பெண் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர்கள் அந்தப் பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அந்தப் பெண்ணின் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவர்கள் சந்தேகித்துள்ளனர். பின்னர் கிடைத்த பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் பிரேதப் பரிசோதனை முடிவில், அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கத்தியை வைத்து அந்தப் பெண்ணை கழுத்தை அறுத்துக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதன்காரணமாக, ஏற்கெனவே அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கத்தியால் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய சாய் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சாய் என்ற அந்த நபரைப் பிடித்து விசாரித்ததில், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த இளம்பெண் மனவளர்ச்சி குன்றியவர் என்பதும், ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் தனியாக அவர் செல்வதை கவனித்த சாய் அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. அந்தப் பெண்ணை அங்கிருந்து ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்ற சாய் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது அந்தப் பெண் சத்தம் போட்டதால் கற்களைக் கொண்டு அவரைத் தலையில் தாக்கியுள்ளார். அதன்பிறகு சாய் மற்றும் அவருடைய கூட்டாளிகள் 4 பேர் சேர்ந்து அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்த வழக்கில் சாய் மற்றும் அவருடைய கூட்டாளிகளான வெங்கடேஷ், சரத், வினோத், லஷ்மையா ஆகிய 5 பேரும் திஷா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

CRIME, MURDER, RAPE, ANDHRA, WOMAN, DISHAACT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்