'இப்ப வாங்கடா பாக்கலாம்'... 'பள்ளியில் நடக்கும் கொடுமைகளைத் தடுக்க... 4ம் வகுப்பு மாணவியின் அசத்தல் கண்டுபிடிப்பு!'
முகப்பு > செய்திகள் > இந்தியாபள்ளிக் கொடுமைகளைத் தெரிவிக்க ஒரு செயலியை கண்டுபிடித்த 4ம் வகுப்பு மாணவியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் 4ம் வகுப்பு படிக்கும் மாணவி மெய்தைபாஹூன் மஜாவ். இவர், தனக்கு எதிராக பள்ளியில் நடந்த சில கொடுமைகளால் (Bullying) பாதிக்கப்பட்டுள்ளார். மேலும், அதைப் பற்றியே சிந்தித்து வந்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, இம்மாதிரியான அச்சுறுத்தலுக்கு எதிராக ஒரு தீர்வை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் மெய்தைபாஹூன் மஜாவ் ஈடுபட்டுள்ளார். அதன் விளைவாக, ஒரு செயலியை அவரே உருவாக்கியுள்ளர். இந்த செயலியின் சிறப்பம்சம் என்னவெனில், புகாரை எந்த நபர் தெரிவிக்கிறார் என்பதை வெளிப்படுத்தாமல் அதிகாரிகளுக்கு புகாரளிக்கும் வகையில் அவர் தயாரித்துள்ளார்.
இது குறித்து மஜாவ் ஊடகத்திற்குக் கொடுத்த பேட்டியில், "நான் நர்சரியில் இருந்தே பள்ளியில் நடைபெறும் கொடுமைகளை அனுபவித்து வந்தேன். அது என்னைப் பாதித்தது. ஆகவே, நான் அதை வெறுக்கிறேன். இதனால், நான் எப்போதும் ஒரு தீர்வைத் தேடிக்கொண்டே இருந்தேன். வேறு எந்தக் குழந்தைக்கும் இந்தப் பாதிப்பு வரக்கூடாது" என்றார்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் மெய்தைபாஹூன் மஜாவ் ஒரு ஆப்-டெவலப்மென்ட் படிப்பில் சேர்ந்ததாகவும், சில மாதங்களுக்குள்ளேயே அதன் திறன்களைப் பயின்று, தேறிவிட்டதாகவும் அவரது தாயார் தசுமார்லின் மஜாவ் தெரிவித்துள்ளார்.
இச்சிறிய வயதில் தனக்கு ஏற்பட்ட பிரச்னைக்கான தீர்வை அணுகி, அதில் வெற்றியும் கண்டுள்ளதால், இவரை அப்பகுதி மக்கள் வெகுபாக பாராட்டியுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பள்ளிக்கு உறவினருடன்'... 'இருசக்கர வாகனத்தில் சென்ற மாணவிக்கு’... '... ‘அரசுப் பேருந்து மோதியதில் நேர்ந்த பரிதாபம்’!
- ‘பலமுறை’ சொல்லியும் கேட்காத பெற்றோர்... கோவையில் ‘7ஆம் வகுப்பு’ மாணவி செய்த ‘அதிரவைக்கும்’ காரியம்...
- ‘நிமிஷத்துக்கு 5 கணக்கு போடணும்!’.. 10-ஆம் வகுப்பு மாணவர்களை சரமாரியத் தாக்கிய பள்ளி முதல்வர்!
- VIDEO: சுடுகாட்டுக்கு தூக்கிச்சென்று பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை.. ஸ்கூல் பஸ் டிரைவரை நிர்வாணமாக்கி புரட்டி எடுத்த மக்கள்..!
- ‘5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இந்த வருஷம் கேன்சேல்!’.. ‘தமிழக அரசின் மாஸ் அறிவிப்பு’!
- ‘நெரிசலில் சிக்கி உயிரிழந்த 14 பள்ளிக் குழந்தைகள்’.. ‘40 பேர் படுகாயம்’.. நெஞ்சை உருக்கும் பரிதாப சம்பவம்!
- ‘தம்பிய சந்தோஷப்படுத்தப் போறேன்’... ‘ஹார்மோனிகாவை வாயில் வைத்து’... ‘மாணவி செய்த காரியத்தால்’... ‘கடைசியில் நேர்ந்த துன்பம்’!
- ‘மகள்’ போடும் கோலத்தை ‘ரசித்துக்’ கொண்டிருந்தபோது... அதிவேகத்தில் ‘பெண்’ ஓட்டிவந்த காரால்... 'தாய்' கண்முன்னே நடந்தேறிய 'துக்கம்'!
- ‘பள்ளியில்’ இருந்து வீடு திரும்பிய ‘15 வயது’ சிறுமி... ‘சீருடையுடன்’ செய்த காரியம்... ‘கலங்கி’ நிற்கும் ‘குடும்பத்தினர்’...
- ‘கொய்யாப்பழம் வாங்கி தர மறுத்த 6ம் வகுப்பு மாணவன்’.. ஆத்திரத்தில் நண்பர்கள் செய்த கொடூரம்..!