'நம்ம புள்ளைங்கலாம் பயங்கரம்'.. 'ஆன்லைன் கேம்க்காக'.. அப்பாவின் அக்கவுண்ட்டில் கைவைத்த 4-ஆம் வகுப்பு படிக்கும் மகன்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆன்லைன் கேம் விளையாடுவதில் இன்றைய காலத்து குழந்தைகள் அடிமையாகவே ஆகிவிடுகின்றனர்.
அதிலும் விளையாட்டுகளுக்கு அடிமையாகிவிட்டால், பெரியவர்களே எந்த எல்லைக்கும் செல்ல துணியும் நிலையில், 4-ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனின் மன நிலை கேமுக்கு அடிமையானதன் பின்னர் என்னதான் செய்ய முடியும்? ஆம், லக்னோவில் 4-ஆம் வகுப்பு சிறுவன் ஒருவர் தந்தையின் செல்போனில் கேம் விளையாண்டு வந்துள்ளான்.
குறிப்பிட்ட ஒரு கேமின் பல தொடர் நிலைகளிலும் நன்றாக விளையாண்டு வெற்றிபெற்று வந்த சிறுவனுக்கு அடுத்த லெவலை தாண்ட வேண்டுமானால், பணம் கட்ட வேண்டும் என்று செக் வைத்தது அந்த கேம். உடனே என்ன செய்வது என்று யோசித்த சிறுவன் தனது தந்தையின் போனிலேயே இருந்த பேடிஎம் ஆப்பை பயன்படுத்தி பணம் செலுத்தியுள்ளான்.
இப்படி கொஞ்சம் கொஞ்சமாக பணம் செலுத்தியதால் தந்தைக்கு சந்தேகம் வரவில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் 34 ஆயிரம் பணம் இழந்ததை அறிந்த தந்தை, சைபர் க்ரைமில் புகார் அளித்துள்ளார். விசாரித்த போலீஸார், எந்தக் கணக்கில் இருந்து பணம் பறிபோனதோ, அந்த கணக்குக்குரிய போன் நம்பரின் மூலமே பேடிஎம்மில் பணம் செலுத்தப்பட்டதை கண்டுபிடித்தனர்.
அதன் பிறகே, தனது மகனை விசாரித்துள்ளார் அந்த தந்தை. அப்போது சிறுவன் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளான். இந்த சம்பவம் பெற்றோர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சினிமா தியேட்டர்ல டிக்கெட் வாங்க முடியாது'...'தியேட்டர் உணவுக்கும் விலை நிர்ணயம்'... அமைச்சர் அதிரடி!
- ‘நாளை முதல் அமலுக்கு வரும்’.. ஆன்லைன் முன்பதிவு ‘ரயில் டிக்கெட் விலை உயர்வு’..
- ‘இதை எல்லாம் ஃபர்ஸ்ட் ஸ்டாப் பண்ணுங்க’.. ‘ஜொமேட்டோ, ஸ்விகி நிறுவனங்களுக்கு எழுந்துள்ள புதிய சிக்கல்’..
- 'கூகுள்ல சர்ச் பண்ணதுதான் ஒரே தப்பு'.. 'மொத்தமா தொடச்சு எடுத்துட்டாங்க' .. பெண்ணுக்கு நேர்ந்த கதி!
- 'ஜொமாட்டோ இதெல்லாம் டெலிவர் பண்வீங்களா ஜொமாட்டோ'.. 4 வயது சிறுவனை நெகிழ வைத்த ஜொமாட்டோ!
- இனி 'அவங்க' டெலிவரி பண்ற 'உணவு' வேண்டாம்னா.. அப்றம் ஜெயில்ல 'களி'தான்.. அதிரடி எஸ்.பி!
- 'மீசை'.. ஸ்டைலைத் தொடர்ந்து இதுவும் வந்தாச்சு.. 'அபிநந்தனாகவே' மாறி ரவுண்டு கட்டலாம்.. வைரல் ஆப்!
- ‘அமேசானின் அதிரடி திட்டம்’... ‘பிரபல உணவு நிறுவனத்தை வாங்க முயற்சி'!
- ‘ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவால்’... ‘மருத்துவ மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்’!
- 'ஒரு செல்போன் கேம் ஆப்'...'15 வயசு பொண்ண இப்படியும் ஆக்கும்'... பெற்றோர்களை நடுங்க வைத்த சம்பவம்!