42 வயது ஆசிரியரை திருமணம் செய்த 20 வயது மாணவி.. "லவ்ஸ் ஸ்டார்ட் ஆனது இப்டி தான்".. வைரலாகும் பின்னணி!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பொதுவாக இரு நபர்களுக்கு இடையே உருவாகும் காதல் என்பது பணம், ஜாதி, மதம், வயது, அந்தஸ்து உள்ளிட்ட எந்தவொரு விஷயத்தையும் பார்க்காமல் ஒருவருக்கு ஒருவர் அன்பு காட்டுவதில் தான் உருவாகும் என பலரும் கூறுவார்கள்.

Advertising
>
Advertising

இந்த நிலையில், தற்போது அப்படி ஒரு காதல் தொடர்பான செய்தி தான், தற்போது இணையத்தில் வெளியாகி பலரது மத்தியில் வைரல் ஆகியும் வருகிறது.

பீகார் மாநிலம், சமஸ்திப்பூர் நகரில் ஆங்கில பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இங்கே ஆசிரியராக சங்கீத் குமார் என்பவரும் பணியாற்றி வருகிறார். முன்னதாக இவரது மனைவியும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி ஒரு சூழலில், ஸ்வேதா குமாரி (வயது 20) என்ற மாணவியும் ஆங்கிலம் கற்பதற்காக பயிற்சி மையத்திற்கு சென்றுள்ளார். அங்கே சங்கீத் மற்றும் ஸ்வேதா ஆகியோருக்கு இடையே பழக்கம் உருவானதாக சொல்லப்படுகிறது.

அப்படி ஒரு சூழலில், அவர்கள் இருவருக்கும் இடையே காதலும் உருவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அது மட்டுமில்லாமல், திருமணம் செய்து கொள்ளவும் சங்கீத் மற்றும் ஸ்வேதா ஆகிய இருவரும் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இருவருக்கும் இடையே சுமார் 22 வயது வரை வித்தியாசம் இருந்ததையும் அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என தெரிகிறது. திருமணம் செய்து கொள்ள அவர்கள் முடிவு செய்ததன் படி, ஒரு சில தினங்கள் முன்பு கோவில் ஒன்றில் வைத்து சங்கீத் குமார் மற்றும் ஸ்வேதா குமாரி ஆகிய இருவரும் திருமணமும் செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வரும் நிலையில், பலரும் பல விதமான கருத்துகளையும் இந்த திருமணம் குறித்து பதிவு செய்து வருகின்றனர்.

LOVE, MARRIAGE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்