கொரோனாவால் இறந்தவர்களில் 42% பேர் ‘இந்த’ பழக்கம் உள்ளவர்கள்தான்.. மருத்துவர்கள் அதிர்ச்சி ரிப்போர்ட்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

புகைபிடிக்கும் பழக்கம் உடையவர்களை கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதுவரை 2 கோடியே 83 லட்சம் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 3 லட்சத்து 35 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைக்களை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புகைப்பழக்கம் உள்ளவர்கள் கொரோனா தொற்றால் அதிகமாக பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். புகைப்பிடிப்பதால், நுரையீரல் புற்றுநோய், காசநோய் உள்ளிட்ட நுரையீரல் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன. தற்போது கொரோனா வைரஸ் நுரையீரலையே அதிகமாக தாக்குகிறது. அதனால் நுரையீரல் பலவீனமாக உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று எளிதாக ஏற்பட வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் வடமாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகமாக காணப்படுகிறது. அதில் உத்தரப்பிரதேச மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். குறிப்பாக மீரட் நகரில் 767 கொரோனா இறுப்புகள் பதிவாகியுள்ளன. அதில் 320 பேர் (42%) புகைப்பழக்கம் கொண்டவர்கள் என்ற அதிர்ச்சி தகவலை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் இளைஞர்கள் அதிகமாக புகைப்பழக்கத்துக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் ஒருவேளை கொரோனா தொற்றின் மூன்றாவது அலை இந்தியாவில் பரவினால், இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்