இப்படி ஒரு கடத்தலை யாருமே பார்த்திருக்க மாட்டாங்க.. குறுகுறுன்னு பார்த்த பயணி.. கொத்தாக தூக்கிய ஆபிசர்.. திகைக்க வைக்கும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டெல்லி விமான நிலையத்தில் வித்தியாசமான முறையில் வெளிநாட்டு பணத்தினை கடத்திச்செல்ல முயன்ற  நபரை அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதைப்பொருள், வெளிநாட்டு கரன்சிகளுடன் இந்தியா வரும் நபர்களை இந்திய விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து கைது செய்து வருகின்றனர். பணத்திற்காக இளைஞர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக காவல்துறை அதிகாரிகள் சமீபத்தில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், வெளிநாட்டு கரன்சிகளை இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சிலர் கடத்த முயற்சித்து கைதாகி வருகின்றனர்.

சந்தேகம்

அந்தவகையில் இன்று டெல்லியில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய்க்கு செல்ல இருந்த நபர் ஒருவர் வெளிநாட்டு பணத்தினை கடத்தி செல்ல முயற்சித்திருக்கிறார். ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலமாக துபாய்க்கு பயணிக்க இருந்த மிசாம் ராசா என்பவர் சந்தேகத்திற்கிடமாக நடந்துகொண்டதை, மத்திய தொழில்துறை பாதுகாப்பு அதிகாரிகள் (CISF) மற்றும் விமான நிலைய புலனாய்வு அதிகாரிகள் கவனித்திருக்கின்றனர். விமான நிலையத்தின் 3 ஆம் டெர்மினல் அருகே நின்றிருந்த அவரை அதிகாரிகள் சோதனை செய்திருக்கின்றனர்.

பரிசோதனை

அப்போது, அவர் வைத்திருந்த பையில் ஏதும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, அவரை சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர் அதிகாரிகள். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் அவரது பை எக்ஸ்ரே கருவி மூலமாக பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. அப்போது வித்தியாசமான பொருள் உள்ளே இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்திருக்கின்றனர். இதனையடுத்து அவரது பையை ஆராய்ந்த அதிகாரிகள் அதில் பெண்கள் அணியும் லெஹங்கா ஆடை இருப்பதை கண்டுபிடித்திருக்கின்றனர்.

பட்டன்

சந்தேகத்திற்கிடமாக அதிகமான பட்டன்களை கொண்டிருந்த அந்த ஆடையை ஆய்வு செய்த அதிகாரிகள் கொஞ்ச நேரத்தில் திகைத்துப்போயிருக்கிறார்கள். சவூதி ரியால்களை சதுரமாக மடித்து அந்த பட்டன்களுக்குள் வைத்து கடத்த முயற்சி செய்திருக்கிறார் அவர். இப்படி அந்த ஆடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,85,500 ரியால்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூபாய் 41 லட்சம்) அதிகாரிகள் கைப்பற்றியிருக்கின்றனர். இதனையடுத்து அவர் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில், ஆடையில் இருந்து கரன்சிகள் எடுக்கப்படும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

SMUGGLING, AIRPORT, LEHENGA BUTTON, லெஹெங்கா, பட்டன், கடத்தல், ஏர்போர்ட்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்