கல்வான் பள்ளத்தாக்கு விவகாரம் .. '4 அல்ல 41 பேர் பலி'.. தப்பிக்க சீனா ராணுவத்தினர் செய்த பகீர்.. வெளியான தகவல்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சிட்னி : லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில்  இந்திய - சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கடந்த 2020 ஜுன் மாதம் மோதல் ஏற்பட்டது. இந்த  மோதலில்  சீன தரப்பில்  41 பேர் உயிரிழந்ததாக ஆஸ்திரேலிய புலனாய்வுப் பத்திரிகை  `கிளாக்ஸன்'  செய்தி வெளியிட்டுள்ளது.

Advertising
>
Advertising

சீனா தங்கள் தரப்பில் வெறும் 4 பேர் தான் இறந்ததாக கூறி வந்த நிலையில், ஆஸ்திரேலிய பத்திரிக்கை  வெளியிட்ட இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  மேலும் சீனா சொன்னது முற்றிலும் பொய்யாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

காதலியோடு அறை எடுத்து தங்கியிருந்த கணவன்.. ஹோட்டலுக்கு போன் போட்ட மனைவி.. ஊழியர்கள் சொன்ன தகவலை கேட்டு உச்சக்கட்ட அதிர்ச்சி

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான காஷ்மீர், லடாக், உத்தரகாண்ட், அருணாச்சலபிரதேசம் உள்பட இமயலையை ஒட்டிய பகுதியில்  எல்லைப் பிரச்னை, பல ஆண்டுகளாக நீடித்துவருகிறது.  எனினும் 1965க்கு பின்னர் வெளிப்படையாக பெரிய மோதல் இந்தியா சீனா இடையே நடக்கவில்லை.  அவ்வப்போது சிறிய  அளவில் சண்டைகள் இருக்கும்.

சீனா ராணுவம்

இந்நிலையில் கடந்த 2020 ஜூன் 15-ம் தேதி லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய எல்லைக்குள் சீனப்படை வீரர்கள் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதை இந்திய வீரர்கள் தட்டிக் கேட்டபோது மோதல் வெடித்தது.  இருதரப்பு வீரர்களும் ஒருவரை ஒருவர் கட்டையாலும், இரும்புக் கம்பிகள் மற்றும் கற்களாலும் மாறிமாறி தாக்கிக்கொண்டனர். இந்த மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இதை இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால் மோதலின் போது பின்வாங்கிய சீனப் படையினர் தரப்பில் எத்தனைப் பேர் உயிரிழந்தனர் என்ற தகவலை சீன ராணுவம் வெளியிட மறுத்தது.

4 சீனா வீரர்கள்

இருப்பினும் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் உளவுப்பிரிவு அமைப்புகள் சீனத் தரப்பில் 40-க்கும் மேல் பலி எண்ணிக்கை இருக்கும் என சந்தேகத்தின.   ரஷ்யாவைச் சேர்ந்த செய்தி நிறுவனமான டாஸ் (TASS - Russian news agency), சீன தரப்பில் 45 வீரர்களுக்கும் மேல் இறந்திருக்கலாம் என்று கூறியது. இந்த செய்திக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில்,  சில மாதங்கள் கழித்து பதிலளித்த சீனா  வெறும் 4 வீரர்களே கல்வான் மோதலில் பலியானதாகக் கூறியது.

குளோபல் டைம்ஸ்

இந்தத் தகவல் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் (People's Liberation Army) அதிகாரபூர்வ செய்தி தளமான பி.எல்.ஏ டெய்லியில் (PLA Daily) வெளியானது. மேலும், இதை மேற்கோள்காட்டி சீன அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ நாளிதழான குளோபல் டைம்ஸ் (Global Times) நாளிதழும் கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த சீன வீரர்களின் பெயர்கள், விவரங்களை முதன்முறையாக  வெளியிட்டது.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல புலனாய்வுப் பத்திரிகையான `கிளாக்ஸன்' (Klaxon), கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இந்திய வீரர்களை விட சீன ராணுவத்தில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறியது. கிளாக்ஸன் பத்திரிகை சார்பில் அமைக்கப்பட்ட உண்மை கண்டறியும் புலனாய்வு செய்திக்குழுவினர், சம்பவம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு அதன் அடிப்படையில் தயாரித்த ஆய்வறிக்கையை தற்போது செய்தியாக வெளியிட்டுள்ளனர்.

41 சீன வீரர்கள் பலி

அதில், இந்திய வீரர்களின் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் பின்வாங்கிய சீன வீரர்கள், ஆற்றில் குதித்து தப்பிச்செல்ல முயன்றார்களாம். அவசரகதியில்,  உறை பனியிலும், காரிருளிலும் சீனப் படையினர் ஆற்றைக்கடக்க முயற்சி செய்த போது, ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் அப்படியே அடித்துச் செல்லப்படிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில், மொத்தம் 38 சீன வீரர்கள் உயிரிழந்தனர் என அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

பஸ் ஸ்டான்ட் டாய்லெட் உள்ளே நுழைந்தபோது.. அங்கு இருந்ததைக் கண்டு ஷாக் ஆன பொதுமக்கள்.. இதெல்லாம் எப்படி இங்க வந்துச்சு?  

மேலும் மூன்று சீன வீரர்கள் இந்திய வீரர்களுடன் நேருக்கு நேர் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்ததாகவும் கூறியிருக்கிறது. மொத்தம் சீன தரப்பில் 41 வீரர்கள் உயிரிழந்திருப்பதாக கிளாக்ஸன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சீனா இந்த தகவலை உறுதி செய்யவில்லை. 

CHINA, INDIA, INDIA CHINA BORDER CLASH, சீனா, இந்தியா, இந்தியா சீனா எல்லை மோதல், கல்வான் பள்ளத்தாக்கு, GALWAN CLASH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்