இதைப் பார்த்தா மட்டன், சிக்கன் மாதிரி தெரியலயே.. ரெய்டில் சிக்கிய வினோத இறைச்சி.. உண்மை தெரிஞ்சு எல்லோரும் வெலவெலத்து போய்ட்டாங்க..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆந்திர பிரதேச மாநிலத்தில் சட்ட விரோதமாக கழுதை இறைச்சியை கடத்த முயன்ற கும்பலை காவல்துறையினர் கைது செய்து இருக்கின்றனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | ஒரே மாதிரி பிளான்.. ஏர்போர்ட் அதிகாரிகளுக்கு வந்த சந்தேகம்.. செக் பண்ணப்போ அதிகாரிகளே ஒருநிமிஷம் ஆடிப்போயிட்டாங்க..!

ஆந்திர பிரதேச மாநிலம் பாப்பட்லா மாவட்டத்தில் கழுதை இறைச்சியை உணவுக்காக சில மர்ம கும்பல் விற்று வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனையடுத்து, அதிகாலை நேரத்தில் மாவட்டத்தின் நான்கு இடங்களில் ரகசிய பரிசோதனை நடத்தப்பட்டது. உசிலிப்பேட்டையில் 2 இடங்களிலும், வேடபாலத்தில் ஒரு இடத்திலும், 2 டவுன் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு இடத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் கழுதை இறைச்சியை பதுக்கி வைத்திருந்த கும்பல் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறது.

ரகசிய பரிசோதனை

மேலும், அவர்களிடம் இருந்து 400 கிலோ கழுதை இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் கழுதைகளை வெட்டும் இடமும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த ரகசிய தேடுதல் வேட்டையில் Ethical Treatment of Animals (PETA) அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்களும் கலந்துகொண்டனர். மேலும், அனிமல் ரெஸ்க்யூ அமைப்பின் கோபால் சுரபத்துலா, ஹெல்ப் ஃபார் அனிமல்ஸ் சொசைட்டியின் தேஜோவந்த் அனுபோஜு மற்றும் கிழக்கு கோதாவரி எஸ்பிசிஏவைச் சேர்ந்த விஜய் கிஷோர் பாலிகா ஆகியோர் இந்த சோதனையில் கலந்துகொண்டனர்.

வழக்கு பதிவு

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), 1860; விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்பு (PCA) சட்டம், 1960; மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை சட்டம், 2006 ஆகிவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய பீட்டா அமைப்பினை சேர்ந்த அஷார்," கழுதைகள் குடும்பங்களில் ஒன்றிணைந்து வாழும் விலங்குகள். இவை மிகவும் சாதுவானவை. ஆனால், ஆந்திர பிரதேச மாநிலத்தில் கழுதைகள் இறைச்சிக்காக வெட்டப்படுகின்றன" என்றார். இந்தியாவை பொறுத்தவரையில் கழுதைகளை இறைச்சிக்காக கொல்வது சட்டப்படி குற்றமாகும். இதற்கு சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

ஆந்திர மாநிலத்தில் கழுதை இறைச்சியை பதுக்கி வைத்திருந்த மர்ம கும்பல் கைது செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலம் முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டுவருகிறது.

Also Read | 5 வருசமா காதலிச்சிட்டு வந்த ஜோடி.. "கடைசியா காதலன் சொன்ன விஷயத்த கேட்டு உடைந்த இளம்பெண்.. துயரம்!!

POLICE, DONKEY, DONKEY MEAT, ANDHRA PRADESH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்