'ஓஹோ புருசனுக்கு இப்படி தான் டீ கொடுப்பியா'... 'கதறிய தாய்'... 'அலறியடித்து கிச்சனுக்கு ஓடிய குழந்தைகள்'... இப்படி ஒரு கணவன் இருப்பாரா?
முகப்பு > செய்திகள் > இந்தியாமனித உயிர் என்பது விலைமதிப்பற்றது. ஆனால் அந்த உயிரை அற்ப காரணங்களைக் கூறி எடுக்கும் மனிதர்களைப் பார்க்கும் போது, இப்படி கூட இருப்பார்களாக என எண்ணத் தோன்றும். அதுபோன்ற ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூர் மாவட்டம் பார்பர் பகுதியைச் சேர்ந்தவர் பப்லு குமார். 40 வயதான இவருக்கு ரேனு என்ற மனைவி உள்ளார். இவர்களுக்குத் திருமணமாகி 12 ஆண்டுகள் ஆன நிலையில், இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தினமும் காலையில் எழுந்தவுடன் பப்லு தேநீர் குடிப்பது வழக்கம். அந்த வகையில் ரேனு, பப்லு குமாருக்குக் காலையில் தேநீர் போட்டுக் கொடுத்துள்ளார். அப்போது அதைக் குடித்த பப்லு, தேநீரில் சர்க்கரை குறைவாக இருப்பதாகக் கூறியுள்ளார்.
அவ்வாறு கூறியதோடு கணவனுக்குத் தேநீர் போடும் போது கூட உனக்குக் கவனம் இல்லையா என கூறி ரேனுவிடம் சண்டையிட்டு உள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த பப்லு குமார் கிச்சனில் இருந்த கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். அப்பாவும், அம்மாவும் ஏதோ பேசிக் கொண்டு இருக்கிறார்கள் என அறையில் படுத்துக் கொண்டிருந்த குழந்தைகள் தாயின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்துள்ளார்கள்.
அப்போது கிச்சனில் ரேனு ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் ரேனுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலை செய்த பப்லு குமாரைத் தேடி வருகின்றனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் "தேநீரில் சர்க்கரை இல்லாததால் கணவர், மனைவியைக் கொலை செய்தது தெரியவந்துள்ளதாகக் கூறியுள்ளார்கள். மேலும் கொலை செய்யப் பயன்படுத்திய கத்தியைப் பறிமுதல் செய்துள்ளோம். அவர்களின் மூன்று பிள்ளைகள் இது குறித்து சாட்சி கூறியுள்ளனர். விரைவில் பப்லு குமார் கைது செய்யப்படுவார்" எனத் தெரிவித்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- திருமண ஊர்வலத்தின் போது வந்த ஒரு ‘போன்கால்’.. பாதியில் நிறுத்தப்பட்ட ‘கல்யாணம்’.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..!
- காளிக்கு படைக்கப்பட்ட இளைஞர் ‘தலை’.. கோயில் வாசலில் நடந்த கொடூரம்.. மதுரையை மிரளவைத்த சம்பவம்..!
- 'நாலாபுறமும் சிதறி ஓடிய மக்கள்'... 'விரட்டி விரட்டி குத்திய இளைஞர்'... கொடூரனாக மாறிய இளைஞரின் அதிர்ச்சி பின்னணி!
- 'உன்னோட குழந்தை தான் வயித்துல வளருது'... 'புது காதலனுடன் இருந்த முன்னாள் காதலி'... 'செகண்டில் துறவி செய்த கொடூரம்'!
- 'புருஷன்' முதுகுல 14 'புல்லட்' பாஞ்சுருக்கு... மனைவியின் வற்புறுத்தலில் நடந்த 'கொலை'... ஸ்கெட்ச்சும் அவங்களே போட்டு குடுத்துருக்காங்க!
- குஞ்சு 'பொரிக்கப்பட்ட' 10 பாம்பு முட்டைகள்... பாம்பு கடித்து 'இறந்த' இளம்பெண் வழக்கில்... வெளியான அதிர்ச்சி தகவல்கள்!
- 'அவருக்கு கொரோனா இருக்கும்னு நினைக்குறேன்...' 'வீட்லலாம் ஏத்த முடியாது...' 'மனைவி வீட்டுக்குள்ள விடலன்னு தெருவில் நின்ற கணவர்...' கடைசியில்...!
- 'மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்கு இதான் சாப்பாடா'?... 'பந்தியில் வந்த சண்டை'.... புதுமாப்பிள்ளையால் மச்சானுக்கு நேர்ந்த கொடூரம்!
- கண்ணெதிரே உயிருக்கு 'போராடிய' மனைவி... தப்பியோடி 'தலைமறைவான' கணவர்... செங்குன்றம் அருகே பரபரப்பு!
- ‘விவாகரத்து வாங்கணும்’!.. ‘தேவையில்லாத பிரச்சனை’.. நண்பன் மனைவியுடன் தொடர்பில் இருந்த வாலிபர் கொலைக்கான பகீர் பின்னணி..!