7 மணிநேரம் நீடித்த சிக்கலான ஆப்பரேஷன் – 4 வயது சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய தமிழக மருத்துவர்கள் – ஆசியாவிலேயே இதுதான் முதல் முறையாம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெங்களூரைச் சேர்ந்த 4 வயது சிறுவனுக்கு வால்வுலஸ் (Volvulus) எனப்படும் சிக்கலான சிறுகுடல் முறுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக சிறுகுடலுக்குள் ரத்த ஓட்டம் தடைபட்டு, சிறுவன் தொடர்ந்து வாந்தி எடுக்கவே, பதறிப்போன சிறுவனின் பெற்றோர் சென்னையில் உள்ள டாக்டர். ரேலா இன்ஸ்டிடியூட் மற்றும் மெடிக்கல் செண்டரை (RIMC) நாடியிருக்கின்றனர்.

Advertising
>
Advertising

குடல் முறுக்கம்

RIMC யின் குழந்தைகள் கல்லீரல் மற்றும் இரப்பை நிபுணர் நரேஷ் சண்முகம் சிறுவனை பரிசோதித்ததில் சிறுவனுடைய சிறுகுடல் பகுதி முழுவதுமாக சேதமடைந்துள்ளது தெரியவந்திருக்கிறது. பொதுவாக சிறுவர்களுக்கு இந்தப் பிரச்சினை வரும் என்றாலும் சிறுகுடலின் சிறிய பகுதியே பாதிப்படையும் எனச் சொல்லும் மருத்துவர் நரேஷ், பெங்களூர் சிறுவனுக்கு முழு சிறுகுடலும் சேதமடைந்துவிட்டதாக கூறியிருக்கிறார்.

சிறுகுடல் மாற்று அறுவை சிகிச்சை

இதனைத்தொடர்ந்து சிறுவனுக்கு சிறுகுடலில் பாதிப்படைந்த பகுதியை மாற்று அறுவை சிகிச்சை செய்வது மட்டுமே ஒரே தீர்வாக அமையும் என மருத்துவர்கள் கூற, சிறுவனின் தந்தை தனது சிறுகுடலின் ஒரு பகுதியை தானம் செய்ய முன்வந்துள்ளார்.

செப்டம்பர் 13 ஆம் தேதி, சிறுவனுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. RIMC யின் தலைவரும் குடல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணருமான மருத்துவர் முகமது ரேலா தலைமையில் 7 மணிநேரம் நீடித்த அறுவை சிகிச்சை வெற்றியில் முடிந்துள்ளது. அடுத்த வாரத்தில் சிறுவனால் உணவுகளை எவ்வித பாதிப்புமின்றி உட்கொள்ள முடிந்திருக்கிறது.

பேராபத்து.. ஓமிக்ரான் தொற்றே இன்னும் முடியல.. அதற்குள் பல வேரியண்ட்டா? WHO வார்னிங்

இதுகுறித்துப் பேசிய மருத்துவர் ரேலா,” சிறுகுடலை தானமாக அளிப்பது இந்தியாவின் அரிதாக நடைபெறும் நிகழ்வாகும். சிறுவனின் குடும்பத்தினருக்கு எனது பாராட்டுக்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஆசியாவிலேயே முதல்முறை

மிக இளம் வயதில் சிறுகுடல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஆசியாவின் முதல் சிறுவன் என ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட் அமைப்பு சான்றளித்திருக்கிறது.
இதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் திரு. மா. சுப்ரமணியன் மற்றும் சுகாதார மற்றும் குடும்ப நலத் துறையின் முதன்மை செயலாளர் ஜே. ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு... 3000 லிட்டர் மதுபானத்தை சாக்கடையில் ஊற்றிய தாலிபான்கள்..!

 

4 YEAR OLD BOY, INTESTINE TRANSPLANT, CHENNAI, RIMC, VOLVULUS, ஆப்பரேஷன், வால்வுலஸ், குடல் முறுக்கம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்