"வேலை தேடும் இளைஞர்கள் தான் டார்கெட்".. வெளிநாட்டுல இருந்து வந்த போன்கால்.. போலீசின் திடீர் ரெய்டில் சிக்கிய கும்பல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாவேலை தருவதாக கூறி 100 க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் பணத்தை சுருட்டிய சர்வதேச மோசடி கும்பலை சேர்ந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
Also Read | "சம்பளம் ₹1.03 கோடி.. ஆனா வேலையே கொடுக்க மாட்டேங்குறாங்க".. கோர்ட்டுக்கு போன ஊழியர்.. யாரு சாமி இவரு..?
பொதுவாகவே படித்து முடித்தவுடன் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை கிடைத்து செட்டிலாகி விட வேண்டும் என பல பட்டதாரிகள் நினைப்பதுண்டு. ஆனால் அவர்களின் இந்த தேடல் சில மோசடி கும்பல்களுக்கான கதவையும் சில சமயங்களில் திறந்து வைத்து விடுகிறது. அந்த வகையில் உலகளாவிய நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 100க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிய சர்வதேச மோசடி கும்பலைச் சேர்ந்த 4 பேரை டெல்லி போலீசார் அதிரடியாக கைது செய்திருக்கின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமேசான் வெப் சர்வீஸில் வேலை தருவதாக கூறி போலி இணையதளம் மூலமாக இந்த மோசடியை நடத்தி இருக்கிறது அந்த கும்பல். வேலை தேடும் இளைஞர்களை குறி வைத்து அவர்களுக்கு அழைப்பு விடுக்கும் இந்த மோசடி நபர்கள், சில போலியான தேர்வுகளையும் வைத்து ஆட்களை தேர்வு செய்தது போல் நடித்திருக்கின்றனர். பின்னர் விர்ச்சுவல் வாலெட் எனப்படும் மெய்நிகர் சேமிப்பு அக்கவுண்டை உருவாக்க சொல்லி அந்த இளைஞர்களிடமிருந்து பணத்தை திருடி இருக்கிறது இந்த கும்பல்.
இது குறித்து பேசிய வடக்கு பகுதி டெல்லி DCP சாகர் சிங் கால்சி,"நாங்கள் நான்கு பேரை கைது செய்துள்ளோம். இந்த கும்பல் துபாயை மையமாகக் கொண்டு செயல்பட்டு வந்திருக்கிறது. அவர்களது வங்கிக் கணக்கை ஆய்வு செய்ததில் 3.5 கோடி ரூபாய் மதிப்பில் பணப் பரிவர்த்தனை நடைபெற்றது தெரிய வந்திருக்கிறது. ஆனால் ஏமாற்றப்பட்ட தொகை அதிகம் இருக்கும் என நம்புகிறோம். இது தொடர்பாக அண்டை நாடுகளில் வசிக்கும் சிலரையும் சந்தேக வளையத்திற்குள் கொண்டு வந்திருக்கிறோம்" என்றார்.
சமீபத்தில் டெல்லியை சேர்ந்த 20 வயதான இளம் பெண் ஒருவர் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில் வெளிநாட்டு எண்ணில் இருந்து தனக்கு ஒரு போன் கால் வந்ததாகவும் அதில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலை தருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்ததாக தனது புகாரில் தெரிவித்திருக்கிறார். பின்னர் அவரிடமிருந்து 3.15 லட்ச ரூபாயை அந்த கும்பல் பெற்றதாகவும் அதன் பின்னர் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் அந்த இளம் பெண் தனது புகாரில் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து விசாரணையில் இறங்கிய போலீசார் பல்வேறு இடங்களில் ரெய்டு நடத்தி வந்தனர். அப்போது, அசோக் விஹார் பகுதியில் இயங்கிவந்த ஒரு நிறுவனத்தை சேர்ந்த 2 ஊழியர்கள் மற்றும் அவர்களது நண்பர்களிடத்தில் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. அதன்பெயரில் அவர்களை கைது செய்திருக்கும் போலீசார் இந்த மோசடி குறித்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Also Read | "நான் கொலை செய்யப்படலாம்.. ரிஸ்க் அதிகமா இருக்கு".. அதிர வைத்த எலான் மஸ்க்.. பரபர பின்னணி.!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- காதல் மனைவி மீது வந்த சந்தேகம்.. தாலி கயிறை வைத்தே கணவன் செஞ்ச பயங்கரம்.. உறைந்துபோன கிராமம்..!
- எலி பிடிக்கும் வேலைக்கு ₹1.38 கோடி சம்பளம்.. அறிவிப்பை பார்த்துட்டு ஷாக் ஆன நெட்டிசன்கள்.. எங்கப்பா இது?
- கறி குழம்பில் மயக்க மருந்து.. செப்டிக் டேங்க் குழியில் கணவர் உடல்.. மனைவி புகார் கொடுத்த 10 நாளில் நடந்த ட்விஸ்ட்!!
- "நாங்க ராஜவம்சம் பேபி".. இளைஞரின் உலக மகா உருட்டு.. நம்பிய இளம்பெண்ணுக்கு வந்த சோதனை.. காப்பு மாட்டிய போலீஸ்..!
- மதுராவில் 581 கிலோ போதைப் பொருளை திண்ற எலிகள்?.. நடந்தது என்ன? கோர்ட்டில் விளக்கமளித்த போலீசார்!
- "தெய்வமே.. வேலை கிடைச்சிடுச்சா".. கூகுளில் செலெக்ட் ஆன மகன்.. சந்தோஷத்தில் அம்மா கொடுத்த ரியாக்ஷன்.. வீடியோ..!
- கேரளாவில் கொள்ளை.. தப்பிக்கலாம்னு திருடர்கள் போட்ட பலே பிளான்.. கடைசில மண்டை மேல இருந்த கொண்டையை மறந்த கதையா ஆகிடுச்சு..!
- கல்யாணமான 5 மாசத்துல மணப்பெண்ணுக்கு நடந்த துயரம்.. போலீசுக்கு உறுத்தலா இருந்த ஒரு விஷயம்.. கடைசியில வெளியான அதிர்ச்சி தகவல்..!
- ஷ்ரத்தா வழக்கை போலவே நடந்த பயங்கரம்.. இளம்பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பர் செஞ்ச பகீர் காரியம்..!
- திருமணத்தை மீறிய உறவு.. சிறப்பு பூஜை என மந்திரவாதி செய்த நடுங்க வைக்கும் காரியம்.. நாட்டையே உலுக்கிய சம்பவம்..!