'வேண்டாம்னு சொன்னனே கேட்டியா'...'ஜாலியா குளிக்க போன பசங்க'... மனதை ரணமாக்கும் துயரம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாநண்பர்களோடு குளிக்க சென்ற மாணவர்கள் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சேர்ந்த 5 மாணவர்கள் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்கள். நண்பர்களான 5 பேரும் சேர்ந்து அந்த பகுதியில் உள்ள கடலுக்கு குளிக்க சென்றார்கள். கடலுக்கு சென்ற 5 பேரும் குளித்து கொண்டிருந்தபோது திடீரென ராட்சச ஆலை ஒன்று 5 பேரையும் சுருட்டி சென்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த துயர சம்பவத்தில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் உயிர்தப்பினார்.
இந்நிலையில் அந்த பகுதியில் இருந்த மீனவர்களிடம் தனது நண்பர்களுக்கு நடந்த துயரம் குறித்து தெரிவிக்க அவர்கள் உடனடியாக கடலுக்குள் சென்று தேடினார்கள். இதனிடையே சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் மீட்பு குழுவினருடன் சேர்ந்து மாணவர்களின் ஒட்டல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே சம்பவத்தை அறிந்த மாணவர்களின் பெற்றோர் கடற்கரை பகுதிக்கு விரைந்தனர். அப்போது 'குளிக்க போக வேண்டாம்ன்னு எவ்வளவோ சொல்லியும் கேட்காம இப்படி உயிரை விட்டுட்டியே'' என மாணவனின் தாய் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.
முன்னதாக வங்கக் கடலில் எழுந்த புல்புல் புயலால் கடல் அலைகளில் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதையறியாமல் கடலில் குளிக்க சென்று மாணவர்கள் தங்களின் உயிரை இழந்தது தான் சோகத்தின் உச்சம்.
மற்ற செய்திகள்
‘எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதிய மின்சார ரயில்’! 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்..! பரபரப்பு சம்பவம்..!
தொடர்புடைய செய்திகள்
- சாலையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார்..! படுகாயம் அடைந்த பாஜக எம்.பி..!
- 'போட்டாபோட்டி'..குரோம்பேட்டை அருகே கார் மோதி.. தூக்கி 'வீசப்பட்ட' காவலர் உயிரிழப்பு.. மாணவர் கைது!
- 'கால் தவறி விழுந்த மூதாட்டி'... 'கண் இமைக்கும் நேரத்தில்'... 'அரசுப் பேருந்தால் நிகழ்ந்த சோகம்'!
- ‘2020ஆம் ஆண்டு மட்டும்’.. ‘புதிதாக 23 ஆயிரம் பேருக்கு வேலை’.. ‘பிரபல ஐடி நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு’..
- ‘கோவிலுக்கு போனபோது’... '8 பேருக்கு நிகழ்ந்த கொடூரம்'... 'சோகத்தில் ஆழ்ந்த குடும்பங்கள்'!
- ‘பாதுகாப்புக்காக சென்ற போலீஸ் வேன்’.. ‘பேருந்துக்கு காத்திருந்தவர்கள் மீது மோதி கோர விபத்து’..
- ‘அதிவேகத்தில் பிரேக் பிடிக்காமால்’... ‘தாறுமாறாக ஓடிய லாரி’... ‘எதிரே வந்த அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி’... 'நிகழ்ந்த கோர விபத்தில், 12 பேர் பலி!
- ‘குழந்தைகள் தினம்தான்’.. ‘ஆனால் ஹோம்வொர்க் பெற்றோருக்கு’.. ‘பள்ளிக் கல்வித்துறையின் வித்தியாசமான முயற்சி’..
- ‘நடுரோட்டில் திடீரென தீப்பிடித்த’... ‘தனியார் சொகுசுப் பேருந்து’... 'பதறிப்போன பயணிகள்’!
- ‘சுற்றி பார்க்க வந்தபோது’... 'நொடியில் 100 அடி பள்ளத்தில்'... 'வேன் கவிழ்ந்து நேர்ந்த பரிதாபம்'!