எவரெஸ்ட் சிகரத்தை விட அதிக உயரத்திற்கு அடுக்கலாம்.. இந்தியாவில் விற்ற 350 கோடி DOLO 650 மாத்திரைகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டோலோ 650 என்பது பல வகை பாரசிட்டமால் மாத்திரைகளில் ஒன்றாகும். மருத்துவரின் ஆலோசனைப்படியே எந்த மருந்துகளையும் உட்கொள்ள வேண்டும், தானாக மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருத்து உட்கொள்வது தவறானது மற்றும் உடலுக்கு தீங்கானது. 

Advertising
>
Advertising

பாரசிட்டமால் மாத்திரை 3 கிராம் அளவுக்கு உள் தான் சாப்பிட வேண்டும். அதற்கு மேல் சாப்பிட்டால் அது அதிக டோஸாகக் கணக்கிடப்படுகிறது. அதிக டோஸ் மாத்திரைகள் உடலுக்கு தீங்கானது. ஒரே நேரத்தில் ஒரேவிதமான மாத்திரையை ஒன்றுக்கு மேல் உட்கொள்ளும் போது ஓவர் டோஸாக மாறும். உட்கொள்ளும் மாத்திரைகள், உடல் நிலைக்கு ஒத்துக்கொள்ளாமல் அலர்ஜி ஏற்படுத்துவதும் ஓவர் டோஸாக வரையறுக்கப்படுகிறது. ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை நினைவில் கொண்டு, நோயாளியின் வியாதி, ஏற்படும் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.

இந்தியாவில் கொரோனா காலத்தில் இந்த Dolo 650 மாத்திரையின் வியாபாரம் படு ஜோராக நடந்துள்ளது. சாதாரண காய்ச்சல், உடல்வலி, கொரோனா தடுப்பூசி செலுத்துவதால் உண்டாகும் சிறிய உடல் வலிக்கு மருந்தாக டோலா 650 பரிந்துரைக்கப்படுகிறது. இதய நோய், சிறுநீரக நோய் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களும் எடுத்துக்கொள்ளும் வகையில் இம்மாத்திரை அமைந்துள்ளதால் பரிந்துரைக்கப்படுகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு Dolo பாதுகாப்பானது, தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது Dolo எந்தவொரு ஆபத்தான தாக்கங்களையும் ஏற்படுத்தாது என கூறப்படுகிறது.

டோலோ 650 மைக்ரோ லேப்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் மூலம் தயாரிக்கப்படுகிறது. இது பெங்களூரைச் சேர்ந்த இந்நிறுவனம் 1973ஆம் ஆண்டில் ஜி.சி. சூரனா என்பவரால் நிறுவப்பட்டது. இந்நிறுவனத்தின் ஆண்டு வருவாய் ரூ.2,700 கோடியாகும்.  2020 முதல் கடந்தாண்டு மே மாதம் வரை இந்தக் காலக்கட்டங்களில் இந்தியர்கள்  350 கோடி டோலோ 650 மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 350 கோடி டோலா மாத்திரைகளையும் செங்குத்தாக அடுக்கி வைத்தால், அது உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை விட 6,000 மடங்கு உயரமாக இருக்கும் என கூறப்படுகிறது.

டோலோ 650 2021ஆம் ஆண்டில் ரூ.307 கோடி வருமானம் பெற்று இந்தியாவில் விற்பனையாகும் காய்ச்சல் மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளில் 2ஆம் இடம் பிடித்துள்ளது. ஜிஎஸ்கேயின் கால்போல் மாத்திரை ரூ.310 கோடி வருமானம் பெற்று முதலிடத்தில் உள்ளது. ரூ.23.6 கோடி மாத்திரை விற்பனையுடன் பிரபலமான குரோசின் மாத்திரை ஆறாம் இடத்தில் உள்ளது.

 

MEDICALNEGLIGENCE, DOLO 650, BODYACHE, COUGH, TOOTHACHE, FEVER, COLD, HEADACHE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்