‘பிரசவ வலியில் துடித்த இளம் பெண்’... ‘வெகுநேரமாகியும் கிடைக்காத ஆம்புலன்ஸ்’... ‘போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஃபோன் செய்த குடும்பத்தினர்’... 'நெகிழ வைத்த காவலர்கள்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் டெல்லியில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை காவல்துறையினர் தங்களது வாகனத்தில் அழைத்துச் சென்று பிரசவத்திற்கு உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் Maidan Garhi பகுதியைச் சேர்ந்த அஞ்சனி என்ற இளம் பெண்ணுக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது பலமுறை ஆம்புலன்ஸுக்கு போன் செய்தும் ஆம்புலன்ஸ் வராத காரணத்தினால் அந்தப் பெண் வலியால் துடித்து இருக்கிறார். இதை அடுத்து காவல்துறையின் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட குடும்பத்தினர், தங்களது பெண் பிரசவ வலியால் துடிப்பது கூறி உதவி கோரியுள்ளனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தங்களது வாகனத்திலேயே கர்ப்பிணியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அந்த பெண்ணுக்கு அங்கு அழகான குழந்தை பிறந்துள்ளது. தற்போது தாயும் செய்யும் நலமுடன் இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உரிய நேரத்தில் தன் மனைவிக்கு உதவி தன் குழந்தையும் மனைவியையும் காப்பாற்றிய காவல்துறையினருக்கு கணவர் சங்கீத் நன்றி தெரிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நாளிலிருந்து இதுவரை 31 கர்ப்பிணி பெண்களை மருத்துவமனையில் சேர்க்க டெல்லியில் போலீசார் உதவியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

POLICE, LOCKDOWN, DELHI, PREGNANT, WOMAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்