கிரிப்டோ கரன்சிக்கு 30% வரி .. பிஎஃப்க்கு வரிச்சலுகை.‌. சத்தம் இல்லாமல் நடந்த முக்கியமான அங்கீகாரம்?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

2022- 23ம் ஆண்டு அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட் தாக்கலில் மிக முக்கிய அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். பிட்காயினுக்கு 30% வரி விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கு பிஎஃப் வரிச்சலுகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்திய வங்கித் துறையை நிர்வகிக்கும் மத்திய ரிசர்வ் வங்கி, 2013ம் ஆண்டின் போதே கிரிப்டோகரன்சி என ஒன்று இருப்பதாகவும், அதில் உள்ள சட்ட சிக்கல்கள் மற்றும் அபாயங்களை இந்தியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என எச்சரித்தது.

Advertising
>
Advertising

குறிப்பாக 'கிரிப்டோ கரன்சிகள், பொருளாதாரம் மற்றும் நிதி நிலைத்தன்மைப் பார்வையில் பார்க்கும் போது, ஆர்பிஐக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது' என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில், இந்தியாவில் தனியார் கிரிப்டோ கரன்சியை கட்டுப்படுத்தும் மசோதா 2021,) கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேட்டபோது,  "அது மிகவும் சிக்கலான பகுதி, மேலும் அது எந்தவித நெறிமுறை சட்டங்களின் கீழும் இல்லை. அதை தடை செய்ய அரசு எந்த வித தீர்மானமும் எடுக்கவில்லை" என்று தெரிவித்திருந்தார்.

கிரிப்டோ கரன்சி மூலம் வரும் வருவாயை கணக்கு காட்டாமல் தப்பித்து வந்தனர். இதற்கு வரி இல்லை என்ற நிலையே இருந்தது. இதனால் தங்களது கருப்பு பணத்தை இதில் முதலீடு செய்து லாபம் பார்த்து வந்துள்ளனர்.  இந்த லாபத்திற்கு கொஞ்சம் கூட வரி காட்டாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், மத்திய அரசு இன்னும் கிரிப்டோகரன்சி மசோதாவைத் தாக்கல் செய்யாத நிலையில்,  டிஜிட்டல் சொத்து முதலீட்டில் கிடைக்கும் அனைத்து வருமானத்திற்கும் அதிகப்படியாக 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தியாக மாறியுள்ளது.  கிரிப்டோ கரன்சியைப் பரிசாகக் கொடுத்தால், பரிசை பெரும் நபர் தான் வரி செலுத்த வேண்டும். இதனால் புதிய முதலீட்டாளர்கள் எண்ணிக்கை படிப்படியாகக் குறையும்.   மேலும்,  2022, 2023 முதல் இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் பிளாக்செயின் பிற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிட்டல் ரூபாயை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கிரிப்டோகரன்சியை தனிநபர்கள் ஆதிக்கம் செலுத்தும் பரிவர்த்தனையாக வைத்திருக்க அரசு விரும்பவில்லை.

அதற்காகவே இத்தனை கெடுபிடி.  இந்த டிஜிட்டல் நாணயத்தின் மூலம் இந்தியாவில் பணப்புழக்கத்தை எளிதாக நிர்வாகம் செய்ய முடியும் என்பத மத்திய அரசின் கணிப்பு. இந்த டிஜிட்டல் கரன்சி முறையாக அக்டோபர் 2021 இல், நைஜீரியா அறிமுகப்படுத்தியது. இது வட்டி அல்லாத CBDC ஆகும். இந்தியாவுக்கென பிரத்யேக கிரிப்டோ கரன்சி உருவாக்கப்படும் என்றும் இந்த ஆண்டே ரிசர்வ் வங்கி மூலம் டிஜிட்டல் பணம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிஎஃப் வரிச்சலுகை

ஒரு ஆண்டில் ஒரு ஊழியரின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பங்களிப்பு செய்யப்பட்டிருந்தால், அதற்கு வரி விதிக்கப்படும் என கடந்த ஆண்டு பட்ஜெட்டில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதனால், வரி செலுத்த வேண்டியிருக்கும். சேமிப்பில் பாதிப்பு ஏற்படும். மாதத்திற்கு ரூ. 20,833-க்கு மேல் பி.எஃப். செலுத்துபவர்கள் இதனால் பாதிப்படைவார்கள்.  ரூ. 1,73,608 மேல் அடிப்படை மாத சம்பளம் உள்ள அனைத்து நபர்களுக்கும் ஒரு வருடத்தில் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பி.எஃப் பங்களிப்பு இருக்கும். அந்த கூடுதல் தொகையில் சம்பாதித்த வட்டிக்கு வரி செலுத்த வேண்டியிருந்தது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கு பிஎஃப் வரிச்சலுகை வழங்கப்படும் என்று இன்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் அளவு 10%-ல் இருந்து 14%-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

CRYPTO CURRENCY, TAX 30%, UNION 2022 BUDGET, FINANCE MINISTER NIRMALA SITHARAMAN, PF FUND, INDIAN GOVT, 2022 -2023 BUDGET

மற்ற செய்திகள்