‘பக்கெட்டில் இறந்து கிடந்த 3 வயது சிறுமி..’ பெற்றோர் தூங்கும்போது நடந்த பரிதாபம்..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

போபாலில் 3 வயது சிறுமி வாளியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘பக்கெட்டில் இறந்து கிடந்த 3 வயது சிறுமி..’ பெற்றோர் தூங்கும்போது நடந்த பரிதாபம்..

போபாலைச் சேர்ந்த சுரேந்திர ரகுவன்ஷி என்பருக்குத் திருமணமாகி மூன்று வயதில் ஒரு குழந்தை உள்ளது. சம்பவம் நடந்த அன்று தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை காலை எழுத்து பார்த்தபோது காணாமல் போயுள்ளது. வீடு முழுவதும் தேடிப் பார்த்தபோது குளியலறை வாளியில் குழந்தை பேச்சு மூச்சு இல்லாமல் இருந்துள்ளது.

இதைப் பார்த்துப் பதறிய குடும்பத்தினர் உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு குழந்தையின் பெற்றோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் குழந்தையின் பெற்றோர் சிகிச்சை எடுத்து வந்துள்ளனர். மருந்து சாப்பிட்டதில் இருவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது குழந்தை எழுந்து குளியலறைக்குச் சென்றுள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு  முன்புகூட குழந்தை இதேபோல குளியலறைக்கு நடந்து சென்றுள்ளது. ஆனால் அப்போது பெற்றோர் பார்த்துக் குழந்தையைத் தூக்கி வந்துள்ளனர்.

BHOPAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்