டெல்லியைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் ஐஃபோனுக்காக நண்பனைக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மோதி நகர் பகுதியில் வசித்து வந்த விக்கி (15) என்ற சிறுவன் திடீரென காணாமல் போயுள்ளார். இரண்டு நாட்களாகத் தேடியும் சிறுவன் கிடைக்காததால் அவருடைய பெற்றோர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் பசாய் தாராபூர் பகுதியிலுள்ள ஒரு பாழடைந்த வீட்டில் ஒரு சிறுவனின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார் அது விக்கி தான் என உறுதி செய்துள்ளனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து இதுதொடர்பாக மூன்று சிறுவர்களை மடக்கிப் பிடித்துள்ளனர்.
அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் விக்கியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். அந்தச் சிறுவர்கள் நண்பனான விக்கி வைத்திருந்த ஐஃபோனை தங்களுக்கு வேண்டுமெனக் கேட்டுள்ளனர். அதற்கு மறுத்த விக்கி செல்ஃபோனைக் கொடுக்காததாலேயே கொலை செய்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த வழக்கில் சிறுவர்கள் மூன்று பேரும் சிறார் சட்டத்தின்படி விசாரணைக்குப் பிறகு சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. ஐஃபோனுக்காக மூன்று சிறுவர்கள் நண்பனையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பிரிந்து சென்ற பெற்றோர்'...'4 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்'... நெஞ்சை உலுக்கும் சம்பவம்!
- 'நீ எங்க கூட 'தன்பால் உறவு' வச்சுக்கணும்'... 'நண்பர்களை நம்பி சென்ற இளைஞருக்கு'...'நேர்ந்த பரிதாபம்'!
- 'முன்னாள் கணவருடன் தொடர்பில் இருந்த பெண்'... 'ஏமாந்த கணவன் செய்த வெறிச் செயல்'!
- ’தம்பி கொலைக்கு பழிக்கு பழி தீர்த்து’... 'சமாதியில் அண்ணன் செய்த காரியம்'!
- ‘எங்க பொண்ணையா காதலிக்கிற??’... 'நம்பி சென்ற கர்ப்பிணி மனைவி'... 'இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்'!
- 'தலைக்கேறிய போதை'... 'தந்தை செய்த வெறிச் செயல்'... '7 வயது சிறுமி'க்கு நேர்ந்த பரிதாபம்!
- ‘காரில் வைத்து எரித்துக் கொன்ற நண்பர்கள்’... ‘இளைஞரின் கொலையில் பரபரப்பு'!
- 'வந்ததும் தெரியல.. போனதும் தெரியல'.. ‘ஒரு நொடியில்’ பெண்மணியை பதற வைத்த சம்பவம்!
- 'மருமகளுக்கு பாலியல் தொல்லை தந்த மாமனார்'... 'மாமியார் செய்த காரியம்'!
- ‘பெண்கள் மட்டுமில்ல இனி இவங்களும் மெட்ரோல இலவசமா போகலாம்’.. கலக்கப் போகும் மாநில அரசு!