‘லாரி டயர் வெடித்து விபத்து’.. 3 வெளிமாநில தொழிலாளர்கள் பலி.. அடுத்தடுத்து நடக்கும் சோகம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

லாரி டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த வெளிமாநில தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊருக்கு பயணம் செய்து வருகின்றனர். தற்போது போக்குவரத்து சேவை இல்லாததால் பலர் நடந்தே தங்களது சொந்த ஊருக்கு செல்கின்றனர். இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் இருந்து வெளிமாநில தொழிலாளர்கள் பலர் லாரியில் நேற்றிரவு சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளனர்.

லாரி ஹான்சி-மிர்சாபூர் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென டயர் வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 3 வெளிமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரு லாரிகள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் 24 வெளிமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர். இந்த நிலையில் மறுபடியும் சொந்த ஊருக்கு லாரியில் சென்ற தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்