'இப்போ பாக்குற வேலை வேண்டாம்'... 'புதிய வேலைக்கு தாவுவோம்'... இந்தியர்களின் முடிவுக்கு என்ன காரணம்!
முகப்பு > செய்திகள் > இந்தியா4-இல் 3 இந்திய தொழில்துறை ஊழியர்கள் தங்களது தற்போதைய வேலையில் இருந்து புதிய வேலைக்கு இடம்மாறுவது குறித்து பரிசீலிப்பார்கள் என்றும், அடுத்த 12 மாதங்களில் புதிய பணியிடங்களில் சேர்வதை தீவிரமாக எதிர்பார்க்கிறார்கள் என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
2021-ஆம் ஆண்டில் புதிய வேலை தேடுபவர்களில் 5-ல் 2 பேர், வேலை தேடுவதற்கு ஆன்லைன் கற்றல் மிக முக்கியமானதாக இருக்கும் என்று சுமார் 1,016 தொழில்துறை ஊழியர்களிடம் இருந்து பெற்ற பதில்களை அடிப்படையாகக் கொண்ட கணக்கெடுப்பை லிங்க்ட்இன் "வேலை தேடுபவர் ஆராய்ச்சி அறிக்கை" என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும், 2021 ஆம் ஆண்டில் வேலைச்சந்தை தொடர்ந்து போட்டித்தன்மையுடன் இருப்பதால் இந்திய தொழில்த்துறை ஊழியர்களிடையே நிச்சயமற்ற தன்மை மற்றும் கவலையின் உணர்வு அதிகரித்திருப்பதாக அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் வேலை தேடுபவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் அதாவது 38% சதவிகிதத்தினர் அதிகமான ஆட்சேர்ப்பு நிலைகள் மற்றும் 32% பேர் விரிவான நீண்ட விண்ணப்ப ஆவணங்கள் பற்றி கவலைப்படுகிறார்கள். அதே நேரத்தில் 4ல் 3 தொழில் வல்லுநர்கள் அதாவது 74%-த்தினர் நெட்வொர்க்கிங் துறையில் இட ஒதுக்கீடு இருப்பதாகக் கூறியுள்ளனர்.
ஆன்லைன் தொழில்முறை நெட்ஒர்க்கான லிங்க்ட்இன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, "வேலையில் நிச்சயமற்ற தன்மை இருந்தபோதிலும், இந்தியா தொழில் வளர்ச்சியை நோக்கி நெகிழ்ச்சியுடன் முன்னேறியுள்ளது. ஏனெனில் 3-இல் 2 பங்கு அதாவது 64% தொழில் வல்லுநர்கள் தங்களது எதிர்கால முன்னேற்றம் குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாக கூறியுள்ளது.
அதே நேரத்தில் 5 ல் 2 பேர் அதாவது 38%-த்தினர் நெட்வொர்க்கிங் நிகழ்வுகளில் கலந்து கொள்ள நினைக்கிறார்கள். மேலும் 37%-த்தினர் ஆன்லைன் கற்றலில் முதலீடு செய்கிறார்கள். 2021 ஆம் ஆண்டில் ஒரு புதிய வேலையைத் தொடங்குவதில் இது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2020 ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலப்பகுதியில் மிக உயர்ந்த வளர்ச்சி விகிதங்களைக் கண்ட 15 அதிவேக தொழில் வாய்ப்புகளின் பட்டியலையும் லிங்க்ட்இன் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், ஃப்ரீலான்ஸ் கன்டென்ட் கிரியேட்டர்ஸ் மற்றும் சோசியல் மீடியா, டிஜிட்டல் மார்க்கெட்டிங், பிசினஸ் டெவலப்மென்ட் அண்ட் சேல்ஸ் ஆகிய பணியிடங்களுக்கான தேவை அதிகமாக இருந்தன.
கூடுதலாக, ஸ்பெஷலைஸ்டு என்ஜினியர், பைனான்ஸ், கல்வி, ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், ஈ-காமர்ஸ், சைபர் செக்யூரிட்டி, டேட்டா சயின்ஸ், ஹெல்த்கேர், ஹியூமன் ரிசோர்ஸ், யூசர் எக்ஸ்பிரியன்ஸ் டிசைன் மற்றும் கஸ்டமர் கேர் ஆகிய துறைசார்ந்த பணியிடங்களும் 2021 ஆம் ஆண்டில் நிறுவன தேர்வாளர்களை ஈர்க்கும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து லிங்க்ட்இன்னின் டேலண்ட் அண்ட் லேர்னிங் சொலுஷன் இயக்குனர் ருச்சி ஆனந்த் கூறியதாவது, "டிஜிட்டல் மாற்றம் அனைத்துத் தொழில்களையும் தொடர்ந்து இயக்கி வருகிறது. மேலும் தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பமற்ற பணிகள் தொலைதூர பணி கலாச்சாரத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
சோசியல் மீடியாவில் பார்வையாளர்களை உருவாக்குபவர்களும், கண்டன்ட் உருவாக்குநர்களும் சில பிராண்டுகளுக்கு முக்கியம் என்பதை இந்த பட்டியல் நமக்குக் காட்டுகிறது. இதையடுத்து ஹியூமன் ரிசோர்ஸ் அனைத்து துறையிலும் கட்டாயமாக எதிர்பார்க்கப்படும் பணியிடங்களில் ஒன்றாக உள்ளது.
புதிய ஆன்லைன் சேவை உலகில் வாடிக்கையாளரின் அனுபவம் என்பது மிக முக்கியம். மேலும் வளர்ந்து வரும் தொழில்நுட்பம், குறிப்பாக எட்-டெக், தொடர்ந்து ஏற்றம் பெறுகிறது" என்று கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ரிஹானாவின் தாய்நாட்டிற்கு...' 'ஒரு லட்சம் டோஸ் கோவிஷீல்டு...' - பார்படோஸ் பிரதமர் இந்திய பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதம்...!
- 'எந்த தாய்க்கும் என்னோட கஷ்டம் வர கூடாது'... 'பிறந்த குழந்தையை கொஞ்ச முடியாத நிலை'... 3 மாதம் கழித்து நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
- 'உயிர் நீத்தவர்களை அடக்கம் பண்ண முடியாமல்... 5 வாரங்கள் வீட்டிலேயே வைத்திருக்கும் அவலம்!' - கொரோனாவின் ‘பேயாட்டம்’.. கதிகலங்கி நிற்கும் நாடு!
- கொரோனா பரிசோதனை செய்ய.. நோயாளிகளை பொய் கூற வைப்பதாக வெளிப்படையாக கூறிய மருத்துவர்! ‘பரபரப்பு’ பின்னணி!
- Video: “இங்க நிக்குறாரே.. இவர் ஒரு..” .. ‘எப்பேற்பட்ட மனுசன் அவரு’.. ‘துரு துரு’ இளைஞர் செய்த ‘சர்ச்சை’ காரியம்! ‘பரவும்’ டிக்டாக் வீடியோ!
- சினிமா பாணியில்.. 11 மாதம் கோமாவில் இருந்து.. தற்போது மீண்ட இளைஞர்!.. ”கண் முழிச்சதும் இத பத்தி கேக்குறானே? எப்படி சொல்றது?” - தவிக்கும் உறவினர்கள்!
- 'Corona' நெகடிவ் என்பதற்கு ஆவணம் இருந்தும் 2 நாட்கள் கணவரைப் பிரிந்து தனிமை முகாமில் அடைக்கப்பட்ட பெண்!.. ‘காரணம் இப்படி ஒரு விஷயத்தை கோட்டை விட்டது தான்!’
- 'ஐயோ, கையில் இருக்குற காசெல்லாம் கரையுதே'... 'அடியோடு படுத்த வருமானம்'... ஒரே ஐடியாவால் அடியோடு மாறிய வாழ்க்கை!
- 'கொரோனா வார்ட்டே கதியென கிடந்த செவிலியர்'... 'கிளவுஸ் எல்லாம் கழற்றிட்டு இந்த டிக்கெட்டை புடிங்க'... செவிலியருக்கு அடித்த ஜாக்பாட்!
- Video: “முதல்ல எங்க மக்கள் எல்லாருக்கும் கெடைக்கணும்.. அப்றம் தான் மத்த நாடுகளுக்கு!” - தடுப்பூசி விவகாரத்தில் ‘சர்வதேச வர்த்தக அமைச்சர்’ கறார்!