இந்தியாவில் 12 மணி நேரத்தில் 3 முறை நிலநடுக்கம்.. அதிர்ச்சியில் மக்கள்.. முழுவிபரம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திராகண்ட் மாநிலத்தில் 12 மணி நேரத்தில் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது அந்த மாநில மக்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
துருக்கியில் துவங்கிய சோகம்
மத்திய கிழக்கு நாடான துருக்கியில் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் அண்டை நாடுகளான சிரியா உள்ளிட்ட நாடுகளில் பெரும் சேதம் ஏற்பட்டது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கையும் 40000 ஐ கடந்திருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
அடுத்தடுத்த அதிர்ச்சி
இதனையடுத்து நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அதிகாரிகள் உறுதி செய்தனர். இதனிடையே, ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் சீனாவில் ஒரே நாளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக அந்நாட்டை சேர்ந்த நிலநடுக்க ஆய்வுமையங்கள் தெரிவித்திருந்தன. இது ஒருபக்கம் இருக்க இந்தியாவின் விட கிழக்கு மாநிலங்கள் பலவற்றில் சமீப காலங்களில் அடுத்தடுத்து சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருந்தன.
3 நிலநடுக்கங்கள்
இந்த சூழ்நிலையில் உத்திராகண்ட் மாநிலத்தில் 12 மணி நேரத்தில் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது அம்மாநிலம் முழுவதும் உள்ள மக்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. பத்வாரி தொகுதியின் சிரோர் வனப்பகுதியில் நேற்று நள்ளிரவு 12.45 மணியளவில் முதல் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 2.5 ஆக இருந்தது. மூன்றாவது நிலநடுக்கம் காலை 10.10 மணியளவில் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 1.8 ஆக பதிவாகி இருந்தது. இத்துடன் கடந்த 2 மாதங்களில் மட்டும் உத்திராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்து உள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
முன்னதாக துருக்கி மற்றும் சிரியாவை தொடர்ந்து இந்தியாவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளரான டாக்டர். பூர்ணசந்திர ராவ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் உத்திராகண்ட் மாநிலத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருப்பது மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- நிலநடுக்கம் நடுவே... உயிரிழந்ததாக பெட்டியில் வைக்கப்பட்ட நபர்.. இறுதி சடங்கு நடக்க போறப்போ காத்திருந்த இன்ப அதிர்ச்சி!!
- "இந்தியாவில் எந்த நேரத்திலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படலாம்".. எச்சரிக்கும் நிபுணர்.. இந்த இடங்கள்ல தான் வாய்ப்பு அதிகமாம்..!
- அதிகாலையில் அதிர்ந்த நிலம்.. துருக்கி, நியூசிலாந்தை தொடர்ந்து இந்தியாவிலும் நிலநடுக்கம்.. அதிர்ச்சியில் மக்கள்..!
- பசியோட இருக்காதீங்க.. துருக்கியில் தினந்தோறும் 5000 பேருக்கு சாப்பாடு.. மக்களை நெகிழ வச்ச பிரபல Chef.. வீடியோ..!
- "கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்".. துருக்கியை புரட்டிப்போட்ட பூகம்பம்.. கவிப்பேரரசு வைரமுத்து பகிர்ந்த உருக்கமான கவிதை..!
- துருக்கி பூகம்பத்தை 3 நாளைக்கு முன்னாடியே கணிச்ச நிபுணர்.. அதுவும் ரிக்டர் அளவோட சொல்லிருக்காரு.. யாருப்பா இவரு?
- துருக்கியை நிலைகுலைய செய்த பூகம்பம்.. 2400 பேர் பலி.. நிவாரண பொருட்கள் & மீட்பு படையை அனுப்பும் இந்தியா.. முழு விபரம்..!
- ஜோஷிமத் மாதிரியே பூமிக்குள் புதையும் அடுத்த நகரம்.. பீதியில் பொதுமக்கள்.. உச்சகட்ட பரபரப்பில் அதிகாரிகள்..!
- வீடுகளில் விழும் விரிசல்.. மண்ணில் புதைந்து போகும் இந்திய நகரம்?.. காரணம் தெரிஞ்சு பீதியில் உறைந்த மக்கள்.. திகிலூட்டும் பின்னணி!!
- கல்யாண ஊர்வலத்தை நிறுத்திட்டு போராட்டத்திற்கு சென்ற மணமகன்.. அங்க இருந்தவங்களே ஒரு நிமிஷம் ஷாக் ஆகிட்டாங்க.. வைரல் பின்னணி..!