கல்லூரி நண்பர்கள் ஒண்ணா தொடங்கிய பிசினஸ்.. "ஆறே வருசத்துல மட்டும் இத்தன கோடி லாபமா??".. மலைக்க வைத்த தொகை
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக நண்பர்கள் சிலர் இணைந்து ஆரம்பித்த ஆன்லைன் பேக்கரி நிறுவனம் ஒன்றின் தற்போதைய லாபம் தொடர்பான செய்தி, பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

டெல்லி நேதாஜி சுபாஷ் பல்கலைக்கழகத்தில் படித்த நண்பர்கள் ஹிமான்ஷு சாவ்லா, ஷ்ரே சேகல், சுமன் பத்ரா ஆகியோர் இணைந்து, 2016 ஆம் ஆண்டில் Bakingo என்ற ஆன்லைன் பேக்கரியை தொடங்கினர்.
இதற்கு முன்பாக, கடந்த 2010 ஆம் ஆண்டில், பூக்கள், கேக், தனிப்பட்ட கிஃப்ட் உள்ளிட்ட பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் முயற்சியை ஹிமான்ஷு மற்றும் ஷ்ரே ஆகியோர் தொடங்கி இருந்தனர்.
இதன் பின்னர் ஒரு ஆண்டு கழித்து, சுமனும் வந்து சேர்ந்தார். ஆரம்பத்தில் இவர்களிடம் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதி மற்றும் நிர்வாக செயல்பாடுகள் மற்றும் விநியோகம் என அனைத்திற்கும் ஒரே ஆள் தான் இருந்துள்ளனர். 2010 ஆம் ஆண்டு காதலர் தினத்திற்கு நிறைய ஆர்டர் வரவே, அந்த ஒரு நாளில் மட்டும் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான இடங்களில் ஆர்டர்களை டெலிவரி செய்திருந்தனர் ஹிமான்ஷு மற்றும் ஷ்ரே ஆகியோர்.
தங்களின் சொந்த தொழில் முயற்சி பெரிய அளவில் வெற்றி பெற்றதால், நிறுவனத்தை விரிவாக்க வேண்டும் என்றும் அவர்கள் முடிவு செய்திருந்தனர். அதன்படி, கடந்த 2016 ஆம் ஆண்டு, ஹிமான்ஷு, ஷ்ரே மற்றும் சுமன் ஆகியோர் இணைந்து Bakingo என்ற பெயரில், ஆன்லைன் கேக் நிறுவனம் ஒன்றை தொடங்கினர். மேலும் இந்த நிறுவனம் பல்வேறு வடிவில் கேக்கை வடிவமைத்து விற்பனை செய்து வரும் நிலையில், ஹைதராபாத், பெங்களூர், டெல்லி என நாட்டின் 11 இடங்களில் தங்களின் கிளைகளையும் இந்த நிறுவனம் வைத்துள்ளது.
அப்படி ஒரு சூழ்நிலையில், கடந்த 2021 - 22 நிதியாண்டில் மட்டும் இந்த நிறுவனம், சுமார் 75 கோடி வரை லாபம் ஈட்டி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. தற்போது சுமார் 500 பேருக்கு வரை இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், டெல்லியில் ஆஃப்லைன் நிறுவனத்தையும் தொடங்கி உள்ளனர்.
நண்பர்களால் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட கேக் நிறுவனம், தற்போது பல கோடிகள் வரை லாபம் ஈட்டி வரும் விஷயம், பலரது பாராட்டுகளையும் பெற்று வருவதுடன் சிறந்த உத்வேகமாகவும் அமைந்துள்ளது.
மற்ற செய்திகள்