Corona: ‘சிட்டியில எதுவும் கெடைக்காம போயிடுச்சுனா?’.. நடந்தே சென்று கிராமத்தை அடைந்த ‘ஸ்ட்ராங்’ வாலிபர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா தொற்று குறித்து பயப்பட வேண்டிய வேளையில், அதே நேரம் அத்தியாவசியப் பொருட்கள் நகரங்களில் கிடைக்காமல் போய்விடுமோ? என்கிற பயத்தில் பலரும் எப்பாடுபட்டாவது நகரங்களில் இருந்து தங்கள் கிராமங்களுக்கு சென்றுவிட இந்தியா முழுவதும் முயற்சித்துள்ளனர்.

தற்போது இந்தியா முழுவதும் 600-ஐ தாண்டியுள்ளது கொரோனா, மகாராஷ்டிராவில் மட்டும் 135-ஐ தொட்டுள்ளது.  இதன் ஒரு படியாக மகாராஷ்டிராவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த அரசு, இதனை கடுமையாகவும் பின்பற்றி வருகிறது.  இந்நிலையில் நாக்பூரில் பணிபுரிந்து வந்த சந்த்ராபுர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான தினக்கூலி வாலிபர் ஒருவர் செய்த காரியம் ஆச்சரியத்தில் உறைந்துள்ளது.

தற்சமயம் அவருக்கு பணி இல்லாததால், தனது சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என எண்ணியிருக்கிறார். ஆனால் தமது ஊருக்கு செல்வதற்கான வாகன வசதிகளும், பேருந்து வசதிகளும் இல்லாததால், சுமார் 135 கிலோ மீட்டர் தூரம் உண்ண உணவின்றி நடந்தே சென்று, ஒரு வழியாக தமது ஊரை சென்றடைந்துள்ளார். இதேபோல் ராஜஸ்தானில் ரமேஷ் மீனா எனும் தொழிலாளர் கால் உடைந்த தனது மனைவியை தூக்கிக் கொண்டபடி சொந்த ஊருக்கு நடைப்பயணம் செய்துள்ளார். 

CORONAVIRUSLOCKDOWN, INDIACURFEW, STAYHOMEINDIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்