ஆட்டோ மற்றும் 'டாக்சி' ஓட்டுநர்களுக்கு... 10 ஆயிரம் ரூபாய் 'நிதியுதவி' வழங்கும் மாநிலம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

Advertising
Advertising

ஊரடங்கு காரணமாக ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஒய்.எஸ்.ஆர் வாகன மித்ரா திட்டத்தின் தலா 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

இதுகுறித்து ஜெகன்மோகன் ரெட்டி கூறுகையில், ''ஆண்டுதோறும் வாகன பிட்னஸ் சான்றிதழ் பெறுவதற்கும் வாகன காப்பீடு பெறவும் 10 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது என்று ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் என்னிடம் தெரிவித்தனர். அவர்களின் துயர் துடைக்கவே இந்த திட்டத்தை கடந்த ஆண்டு தொடங்கி வைத்தேன். இதன் கீழ் ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் வழங்கப்படும்,'' என்றார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்