“லாக்டவுன்ல வேலை, வருமானங்களை பலர் இழந்துருக்காங்க!”.. தனியார் கல்விக்கட்டணத்தில் 25% தள்ளுபடி - மாநில அரசு அதிரடி!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுஜராத் மாநிலத்தில் கட்டணத்தில் 25 சதவீதம் தள்ளுபடி செய்ய தனியார் கல்வி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
கொரோனா அச்சம் காரணமாக கடந்த 5 மாதங்களாக லாக்டவுன் இருந்ததால், பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணி புரிந்து வந்தோர் வேலை வருமானம் உள்ளிட்டவற்றை இழந்தனர். இதனிடையே கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டதால், நிர்வாக செலவுகளை சமாளிக்க சிரமப்பட்டன.
இதனிடையே பள்ளி, மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ,மாணவியரின் பெற்றோர்களிடம் 75 சதவீதம் அளவிற்கு மட்டுமே கட்டண தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்று, முழு கட்டணத்தை வசூலிக்க கூடாது என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் நிபந்தனைகளுடன் கூடிய 5-ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் வரும் 15ம் தேதி முதல் அந்தந்த மாநில அரசுகளே பள்ளிகளை திறப்பது குறித்து முடிவெடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே பெற்றோர்கள் , சி.பி.எஸ்.இ., ஐ.பி., ஐ.சி.எஸ்.இ., மற்றும் சி.எஸ்.இ.,உள்ளிட்ட தனியார் பள்ளி நிர்வாகிகளுடன் குஜராத் மாநில அரசின் கல்வித்துறை அமைச்சர் பூபேந்திர சிங் சூடாஸ்மா பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் மாணவர்களின் நலன்கருதி பள்ளிகட்டணத்தில் 25 சதவீதம் அளவிற்கு குறைத்து கொள்ளும் முடிவும் எடுக்கப்பட்டது.
அம்முடிவின் படி, வரும்31 ம் தேதிக்குள் கட்டணத்தில் 50 சதவீதம் செலுத்த வேண்டும் எனவும், ஏற்கனவே முழு கட்டணத்தை செலுத்தியவர்களுக்கும் அதற்கான சலுகைகள் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '1.85 லட்சம் IT Employees-க்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்!!!'... 'Wipro-வின் அறிவிப்பால்'... 'குஷியான ஊழியர்கள்...!!!'
- 'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - மேலும் முழு விவரங்கள்...!
- 'இருதய பாதிப்பு இருப்பவர்களுக்கு கொரோனா வந்தால்'?...'ஒர்கவுட் பண்ணும்போது மாஸ்க் போடலாமா'?... எச்சரித்துள்ள மருத்துவர்!
- “குவாரண்டைனில் இருந்த கொரோனா நோயாளிகள்!” .. நள்ளிரவில் திமுதிமுவென நுழைந்த ஏழெட்டு பேர்.. சென்னை தி.நகரில் நடந்த ‘மிரளவைக்கும்’ சம்பவம்!
- 'இத நம்பி தான இருந்தோம்... கடைசில இப்படி ஆயிடுச்சே!'.. அதிபர் டிரம்பின் தேர்தல் வியூகத்தை நொறுக்கிப் போட்ட அறிவிப்பு!.. என்ன செய்யப்போகிறது அமெரிக்கா?
- 'கொரோனாவுக்கு நடுவிலும் ஆபீஸ் செல்பவர்கள் கவனத்திற்கு'... 'இந்த வசதி மட்டும் இல்லன்னா'... 'முக்கிய தகவலுடன் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!!'...
- “32,000 பேருக்கு கூண்டோட நேர்ந்த கதி!”.. விமான நிறுவனங்கள் எடுத்த பரபரப்பு முடிவு!.. ‘இன்னும் என்னலாம் நடக்குமோ!’
- திரையில் வில்லன்... நிஜத்தில் ஹீரோ!.. நடிகர் 'சோனு சூட்'டுக்கு ஐ. நா. விருது!.. புகழ்ந்து தள்ளிய விஜயகாந்த்!.. ஏன் தெரியுமா?... வியப்பூட்டும் தகவல்!
- “இதெல்லாம் என் வேகத்தை குறைச்சுடுமா என்ன?”.. 150 குழந்தைகளைக் கடந்து.. லாக்டவுனிலும் தளராத ‘தாராள பிரபு’!
- 'அன்லாக் 5.0'... 'திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகளை எப்போது திறக்கலாம்?'... 'புதிய தளர்வுகளுடன்'... 'மத்திய அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!'...