அதிர்ச்சி வீடியோ: 'ஆறு மணி நேரம்...' 25 கொரோனா 'நோயாளிகள்'... 'மருத்துவமனைக்கு' வெளியே காத்திருந்த அவலம்!’

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

குஜராத் மாநிலம், அகமதாபாத் மருத்துவமனைக்கு வெளியே 25 கொரோனா நோயாளிகள் உள்ளே அனுமதிக்கப்படாமல் சுமார் ஆறு மணி நேரம் வெளியே காத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த சம்பவம் மருத்துவமனைக்கு வெளியே காத்திருந்த நோயாளி ஒருவர் வெளியிட்ட வீடியோவால் வெளியே தெரிய ஆரம்பித்தது. அந்த வீடியோவில், 'இங்குள்ள சுமார் 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சுமார் மூன்று மணியளவில் நாங்கள் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தோம். தற்போது இரவு மணி 8:45 ஆகியும் நாங்கள் இன்னும் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படவில்லை. யாரும் எங்களுக்கு பதில் கூறவில்லை. தயவு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள்' என அந்த வீடியோவில் மருத்துவமனைக்கு வெளியே காத்திருந்த நோயாளிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து அம்மாநில சுகாதாரத்துறை செயலாளர் ஜெயந்தி ரவி மற்றும் சுகாதார ஆணையர் ஜெய் பிரகாஷ் ஷிவாஹரே ஆகியோர் உடனடியாக மருத்துவமனை விரைந்தனர். பின்னர் வெளியே காத்திருந்த கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்குள் அனுமதித்து சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுத்தனர். அவர்களுக்கு உணவும் வழங்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து ஜெயந்தி ரவி கூறுகையில், 'மருத்துவமனையில் அனுமதிக்க சம்மந்தப்பட்ட நோயாளிகள் சில பேப்பர்களை கொண்டு வர வேண்டும். அந்த பேப்பரில் சில முரண்பாடுகள் இருந்தததால் தகவலை பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனை அதிகாரிகள் சரி செய்து நோயாளிகளை அனுமதித்தனர். இது மாதிரியான நிலை வரும் காலத்தில் நடக்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்' என உறுதியளித்துள்ளார்.

ஆறு மணி நேரம் 25 கொரோனா நோயாளிகள் மருத்துவமனைக்கு வெளியே காத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்