‘13-வது மாடிக்கு சிமெண்ட் எடுத்து சென்ற இளைஞர்’!.. ‘திடீரென உடைந்த பலகை’!.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கட்டிட பணியின் போது 13-வது மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

குஜராத் மாநிலம் சூரத் நகரில் நடைபெற்று வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணியில் ராஜேந்திர கௌசிக் (23) என்ற இளைஞர் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது 13-வது மாடிக்கு சிமெண்ட் மூட்டையை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். பின்னர் மரப்பலகையால் அமைக்கப்பட்ட சாரத்தில் அமர்ந்து தனது வேலையை பார்த்துக்கொண்டு இருந்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக தான் நின்றுகொண்டிருந்த மரப்பலகை திடீரென உடைந்துள்ளது. இதை சற்றும் எதிர்பார்க்காத ராஜேந்திர கௌசிக் கண் இமைக்கும் நேரத்தில் 13-வது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திர கௌசிக்கை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். கீழே விழும் போது இடைஇடையே மூங்கில் சாரங்கள் இருந்ததால், அவற்றின் மீது விழுந்து தரையிக்கு வந்த அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

ACCIDENT, SURAT, CONSTRUCTION, WORKER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்