"பசிக்குதுனு பிஸ்கட் வாங்கப் போனான்!".. 'ஊரடங்கை' மீறியதாகக் கூறப்படும் 22 வயது 'இளைஞருக்கு' நேர்ந்த 'சோகம்'.. கதறி அழும் தந்தை! வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப் பிரதேசத்தில் ஊரடங்கு நேரத்தில் பிஸ்கட் வாங்க சென்ற 22 வயது இளைஞரை தடுத்து நிறுத்தி காவலர்கள் அடித்ததாகக் கூறப்படும் நிலையில் அந்த இளைஞர் 3 நாட்கள் கழித்து இழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் அம்பேத்கர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது தினக்கூலி பணிசெய்துவந்த இளைஞர் ரிஸ்வான் அஹமத், கடந்த ஏப்ரக் 15-ஆம் நாள் மாலை 4 மணி அளவில், தனக்கு பசிக்கிறது என்று சொல்லிவிட்டு அதே பகுதியில் உள்ள மளிகைக் கடைக்கு பிஸ்கட் வாங்கச் சென்றதாகவும், அப்போது வழியில் தபால் அலுவலகம் அருகில் இருந்த ஒரு பெண் காவல் அதிகாரியும், சில காவலர்களும் அவனைத் தடுத்து நிறுத்தி, ஊரடங்கு நேரத்தில் வெளியே வந்ததால் அடித்ததாகவும், இதனால் அவரது உடலில் காயங்கள் ஏற்பட்டதாகவும், ஆனால் ஊரடங்கின் காரணமாக ரிஸ்வானுக்கு வீட்டிலேயே வைத்திய பார்த்து, பின்னர் அஜாபூரிலுள்ள மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றதாகவும், பின்னர் அங்கிருந்து மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அம்மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகவும், ஆனால் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி ரிஸ்வான் உயிரிழந்ததாகவும் ரிஸ்வானின் தந்தை கண்ணீர் விட்டு கதறியபடி தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஏப்ரல் 15-ஆம் தேதி மாலை ஜஷாபூர் பகுதியில் உள்ள கடைக்கு பிஸ்கட் வாங்கச் சென்றதாகக் கூறப்படும் ரிஸ்வானை போலீஸார் தாக்கியதாகவும், ஆனால் தன் மகன் பிஸ்கட் வாங்கவே வெளியே சென்றான் என்றும் ரிஸ்வானின் தந்தை
கண்ணீர் மல்க பேசி போலீஸாரின் காலில் விழுந்து கதறி அழுது பேசும் வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது. எனினும் இதுபற்றி பேசிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவினாஷ் குமார் மிஸ்ரா, விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதேசமயம் ரிஸ்வானின் பிரேதப் பரிசோதனை ரிப்போர்ட் வந்தபிறகுதான் முழுமையான விபரங்கள் தெரியவரும் என்றும் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மாப்பிள போன் பண்ணி'... 'மனைவி மாசமா இருக்கா, GH போணும்ன்னு சொன்னான்'... 'அடுத்து நடந்த திருப்பம்'... நெகிழவைக்கும் இளைஞரின் பதிவு!
- 'ஆஹா... இந்தியா-லயும் ஆரம்பிச்சுட்டீங்களா பா!'... படையல் போடுவதற்கு முன்பு... ராஜநாகத்துடன் போஸ் கொடுத்த இளைஞர்கள்!
- 'இந்த' மாவட்டத்தில் உள்ள... அனைத்து 'அம்மா' உணவகங்களிலும்... இன்று முதல் 'இலவச' உணவு வழங்கப்படும்: முதல்வர்
- 'சைக்கிள் கேப்பில்' 'தில்லாலங்கடி' வேலையில் ஈடுபடும் 'வடகொரியா...' 'கொரோனா' சூழலை பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கும் 'கிம் ஜாங் உன்...'
- சென்னையில் பரபரப்பு... கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்!... உடலை அடக்கம் செய்ய கடும் எதிர்ப்பு!.. என்ன நடந்தது?
- "எய்ட்ஸ், அல்சைமர், ஆட்டிசம், கேன்சர் மற்றும் கொரோனா..." "சகல வியாதிகளுக்கும் ஒரே மருந்து..." 'நம்ம ஊர்ல மட்டும் இல்ல...' 'அமெரிக்காவுலயும் இருக்காங்க போல...'
- 'பாஸ், சென்னை'னா என்னன்னு கேட்டா இத சொல்லுங்க'... 'குஜராத் சிறுமிக்கு சர்ப்ரைஸ்'... ஆனந்த கண்ணீர் வடித்த குடும்பம்!
- ஊரடங்கால் தவித்த 'ரஷிய' தம்பதி... 'திருவண்ணாமலை' மீது 'தியானம்'... கண்டுபிடித்த டிரோன் கேமரா!
- '7மாச கர்ப்பிணி, அப்போ ஏன் டூட்டி பாக்குறீங்க'... 'போலீஸ் அதிகாரி அம்ரிதா சொன்ன பதில்'... நெகிழ்ந்து போன மக்கள்!
- 'ஒரே நாளில் ராக்கெட் வேகத்தில் சென்ற பலி'... 'என்னதான் நடக்குது எங்க நாட்டுல'... உருக்குலைந்த அமெரிக்க மக்கள்!