படிப்பு மேல இருந்த ஆசை.. பிரசவம் ஆன கொஞ்ச நேரத்துல பெண் செஞ்ச காரியம்.. நெகிழ்ந்துபோன அதிகாரிகள்..
முகப்பு > செய்திகள் > இந்தியாபீஹார் மாநிலத்தில் பிரசவமான கொஞ்ச நேரத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத சென்றிருக்கிறார் ஒரு இளம்பெண். இது பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | "தாக்குதல் நடத்துனது யாரு?".. டெல்லி தமிழ் மாணவர்களுடன் VIDEO CALL-ல் பேசிய அமைச்சர் உதயநிதி.. வீடியோ..!
பொதுவாக கல்வி மட்டுமே நம்மிடமிருந்து யாராலும் பிரிக்க முடியாத சொத்து என பலரும் கூறி கேள்விப்பட்டிருப்போம். சாதாரணமான குடும்பத்தில் பிறந்து தங்களுடைய கல்வியின் மூலம் பல வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறி சாதனை படைத்தவர்களை பற்றி நாம் நாள்தோறும் கேள்விப்பட்டு கொண்டே இருக்கிறோம். மக்கள் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் பொருளாதார மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக பலராலும் படிப்பை தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது.
குறிப்பாக பெண்கள் தங்களது திருமணத்திற்கு பிறகு கல்வியை தொடர முடியாமல் தவிப்பதை பார்த்திருப்போம். அப்படியானவர்கள் ஒருவர் தான் ருக்மணி குமாரி. பிகார் மாநிலத்தின் பங்கா மாவட்டத்தை சேர்ந்தவர் ருக்மணி. 22 வயதான இவர் சிறுவயதிலிருந்தே கல்வி கற்க ஆசைப்பட்டு இருக்கிறார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரால் படிக்க முடியாமல் போயிருக்கிறது. திருமணம் ஆன நிலையில் தன்னுடைய படிப்பை தொடர அவர் நினைத்திருக்கிறார். அப்போது அருகில் உள்ள அரசு பள்ளி மூலமாக தனது பத்தாம் வகுப்பு தேர்வை ருக்மணி எழுத முயற்சித்திருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
நிறைமாத கர்ப்பிணியாக ருக்மணி இருந்த சமயத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளும் துவங்கியிருக்கின்றன. அறிவியல் தேர்வுக்காக ருக்மணி படித்துக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக அவர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். காலை 6 மணிக்கு ருக்மணிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இருப்பினும் தேர்வு எழுத விருப்பப்பட்ட அவர் ஆம்புலன்ஸ் மூலமாக தேர்வு மையத்திற்கு சென்று தனது அறிவியல் தேர்வை வெற்றிகரமாக எழுதி முடித்திருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
இது குறித்து அவர் பேசுகையில்,"செவ்வாய்க்கிழமை கணித தேர்வை எழுதி விட்டு வீட்டுக்குச் சென்ற பின்னர் அசவுகர்யம் ஏற்பட்டது. அடுத்த நாள் அறிவியல் தேர்வு இருந்ததால் நான் ஆர்வத்துடன் இருந்தேன். ஆனால் நான் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அடுத்த நாள் காலை 6 மணிக்கு என் மகன் பிறந்தான். இருப்பினும் தேர்வை எழுத நினைத்தேன். அதன்படி ஆம்புலன்ஸ் மூலமாக தேர்வு நடைபெறும் மையத்திற்கு சென்று தேர்வை நல்லபடியாக எழுதினேன். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். கல்வி கற்பதில் நான் மோசமான உதாரணமாக இருந்துவிட கூடாது. எனது மகனை எப்படியாவது நன்றாக படிக்க வைக்க வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே இதுகுறித்து பேசியுள்ள மாவட்ட கல்வி அலுவலர் பவன்குமார்,"பெண்களின் கல்விக்கு அரசு அளித்து வரும் முக்கியத்துவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை இச்சம்பவம் நிரூபிக்கிறது. பின்தங்கிய வகுப்பை சேர்ந்த ருக்மணி, அனைவருக்கும் உத்வேகமாக திகழ்ந்துள்ளார்," என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
Also Read | "CSK வின் பழைய ரெக்கார்ட பாருங்க.. அவங்க கோட்டை அது".. ஆரூடம் சொன்ன கவுதம் கம்பீர்..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "நீங்க Like பண்ணா மட்டும் போதும்.. பணம் கொட்டும்".. புதுசா உருட்டிய கும்பல்.. எச்சரிக்கும் போலீஸ்.. அதிர்ச்சி பின்னணி..!
- திங்கட்கிழமை லீவு எடுத்தது குத்தமா?.. பெண் பணியாளரை வேலையைவிட்டே தூக்கிய முதலாளி.. அப்புறம் தான் பெண்ணுக்கு அதிர்ஷ்டமே அடிச்சுருக்கு..!
- "வீட்டுக்கு வந்து சாப்பிட்டு தான் போகணும்".. குடும்பத்துடன் சேர்த்து வச்ச போலீசுக்கு பெண் வச்ச கோரிக்கை.. நெகிழ்ச்சி வீடியோ..!
- "ஆர்டர் செஞ்சது 12,000 ரூபா டூத் ப்ரஷ், ஆனா பார்சல்ல வந்தது..".. பெண் வாடிக்கையாளரின் வைரல் Tweet.!
- 9 பேருடன் கல்யாணம்.. எல்லார்கிட்டயும் சொன்ன ஒரே பொய்.. கலங்கிப்போன மாப்பிள்ளை..!
- ஒரு வாரமா வீட்டுக்குள்ள இருந்து துர்நாற்றம்.. சந்தேகப்பட்ட அக்கம் பக்கத்தினர்.. விசாரணையில் தெரியவந்த திடுக்கிடும் தகவல்கள்..!
- கிரைண்டரில் சிக்கிய துப்பட்டா.. திடீர்னு கேட்ட அலறல் சத்தம்.. பிறந்தநாள் அன்று இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!
- மருத்துவராகும் கனவு.. திருமணம் முடிந்த அடுத்த நிமிஷமே லேப் கோட்டுடன் தேர்வுக்கு போன புதுமணப்பெண்.. வீடியோ..!
- எப்போதும் செல்போனிலேயே மூழ்கிக்கிடந்த இளம்பெண்.. பறிபோன பார்வை.. மருத்துவர் கொடுத்த '20-20-20' அட்வைஸ்.. என்னப்பா அது..?
- இன்னும் 3 நாளுல கல்யாணம்.. 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.!