6 மாசமா வயித்துவலியால துடிச்சுப்போன நபர்.. ஸ்கேன் ரிப்போர்ட்டை பாத்துட்டு மிரண்டுபோன டாக்டர்கள்..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஹைதராபாத்தில் 56 வயதான ஆண் ஒருவருடைய சிறுநீரகத்திலிருந்து 206 கற்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

Advertising
>
Advertising

Also Read | உலக வரலாற்றிலேயே மிக அதிக விலைக்கு ஏலம் போன கார் இதுதான்.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா?

தெலுங்கானா மாநிலத்தின் நல்கொண்டா பகுதியைச் சேர்ந்தவர் வீரமல்லா ராமலட்சுமய்யா. 56 வயதான இவருக்கு கடந்த 6 மாத காலமாக தீராத வயிற்று வலி இருந்திருக்கிறது. இதனால் அவதிப்பட்டு வந்த ராமலட்சுமய்யா அருகிலிருந்த மருத்துவர் ஒருவரை சென்று சந்தித்துள்ளார். அவரிடம் தன்னுடைய சிக்கலை கூறிய நிலையில், அந்த மருத்துவர் கொடுத்த மாத்திரைகளை அவர் உபயோகித்து வந்திருக்கிறார். ஆனாலும் வயிற்று வலி குறையவில்லை. இதனால் தன்னுடைய அன்றாட பணிகளை கூட அவரால் செய்துகொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து ஹைதராபாத்தில் உள்ள அவேர் க்ளெனேகிள்ஸ் குளோபல்  மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார் ராமலட்சுமய்யா.

ஸ்கேன்

அங்கு ராமலட்சுமய்யாவிற்கு ஆரம்பநிலை பரிசோதனைகள் செய்யப்பட்டிருக்கின்றன. அப்போது, அவருக்கு சிறுநீக கற்கள் இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகித்த நிலையில், சிடி ஸ்கேன் மற்றும் அல்டராசவுண்ட் ஸ்கேன் எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த ஸ்கேன் அறிக்கைகளை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். காரணம், ராமலட்சுமய்யாவின் சிறுநீரகத்தில் ஏராளமான கற்கள் இருப்பது அந்த அறிக்கையின் வாயிலாக தெரியவந்திருக்கிறது.

இந்த மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் மற்றும் சிறுநீரக நிபுணரான டாக்டர் பூலா நவீன் குமார் இதுபற்றி பேசுகையில், "முதற்கட்ட ஆய்வுகள் மற்றும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் சிறுநீரகத்தின் இடது பக்கத்தில் பல சிறுநீரக கற்கள் இருப்பது தெரியவந்தது, மேலும் CT குப் ஸ்கேன் மூலம் மீண்டும் அது உறுதிப்படுத்தப்பட்டது" என்றார்.

அறுவை சிகிச்சை

இதனையடுத்து உடனடியாக ராமலட்சுமய்யாவிற்கு அறுவை சிகிச்சை  செய்யவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து 1 மணிநேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையின் பலனாக ராமலட்சுமய்யாவின் சிறுநீரகத்தில் இருந்த 206 கற்களும் மருத்துவர்களால் அகற்றப்பட்டிருக்கின்றன.

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில் அவர் அடுத்தநாளே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக டாக்டர் நவீன் குமார் தெரிவித்துள்ளார். மேலும், இதுபற்றி பேசிய நவீன் குமார்," கோடை காலங்களில் மக்கள் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இளநீர் குடிப்பது நல்ல பலனைத் தரும். உடலில் நீர்ச்சத்து குறைவதனாலேயே சிறுநீரக கற்கள் தோன்றுகின்றன" என அறிவுறுத்தினார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

KIDNEY STONES, HYDERABAD, OLD MAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்