‘2000 கிமீ நடந்து வீட்டுக்கு வந்த மகன்’.. கண்ணீர் மல்க கட்டியணைத்த தாய்.. அடுத்த சில நிமிடத்தில் நடந்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியா2000 கிலோமீட்டர் நடந்து வீட்டுக்கு வந்த புலம்பெயர் தொழிலாளியை பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தை சேர்ந்தவர் சல்மான் கான் (23). இவர் பெங்களூரில் கட்டுமான வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது ஊரடங்கு அமலில் உள்ள்தால் வேலை இல்லாமல் தவித்து வந்த அவர், தனது நண்பர்களுடன் சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்துள்ளார். ரயில் பயணிக்க முடிவெடுத்து டிக்கெட் கிடக்காததால் நடந்தே ஊருக்கு சென்றுள்ளனர்.
12 நாட்களில் சுமார் 2000 கிலோமீட்டர் நடந்து சொந்த ஊரை சல்மான் கான் அடைந்துள்ளார். நீண்ட நாள்களுக்கு பிறகு மகனை சந்தித்த மகிழ்ச்சியில் சல்மான் கானின் தாய் கண்ணீர் மல்க கட்டி அரவணைத்து வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அவருக்கு அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. நடந்த வந்த களைப்பில் இருந்த சல்மான் கான் வீட்டுக்கு அருகில் உள்ள கரும்பு தோப்பில் கை, கால்களை கழுவுவதற்காக சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாக அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் சந்தேகமடைந்த அவரது தாய் கரும்பு தோப்புக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது தனது மகனை பாம்பு கடித்து இறந்து கிடப்பதைப் பார்த்த அதிர்ச்சியில் அவரும் அங்கே மயங்கி விழுந்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பல்வேறு இன்னல்களை கடந்து சுமார் 2000 கிலோமீட்டர் தூரம் பயணித்து வீடு வந்த இளைஞரை பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஊரடங்கை அமல்படுத்தியதில் நாட்டிலேயே 'சிறந்த' மற்றும்... 'மோசமான' மாநிலங்கள் இதுதான்!
- Video: 'ஒண்ணு' தான் ஷேர் பண்ணி சாப்பிடுங்க... 'பசியுடன்' இருந்த தொழிலாளர்களுக்கு பிஸ்கட் பாக்கெட்டை... 'தூக்கி' வீசிய அதிகாரி!
- Video: ஊழியர்களை 'தாக்கி'... கொரோனா நோயாளிகளின் 'ரத்த' மாதிரிகளை... திருடிக்கொண்டு 'ஓடிய' குரங்கு!
- 'இந்த' 7 மாநிலங்களுக்கு 'வெட்டுக்கிளிகள்' படையெடுக்கலாம்... மத்திய அரசு எச்சரிக்கை!
- கொத்தாக 'மடிந்து' விழுந்த வௌவால்கள்... அச்சத்தில் 'உறைந்த' கிராம மக்கள்... என்ன காரணம்?
- சொன்ன 'பேச்சு' கேட்க மாட்டிங்களா?... 'செங்கல்லால்' கொடூரமாக தாக்கிய தந்தை... சிறுமிகளுக்கு நேர்ந்த 'பரிதாப' முடிவு!
- குளத்துல தண்ணி இருக்கு, எப்படி கொண்டு வரது...? 'களத்தில் கிராமத்து இளைஞர்கள்...' மகிழ்ச்சியில் ஊர் விவசாயிகள்...!
- வீட்ட விட்டு 'தொரத்திட்டாங்க'... 'பிச்சை' எடுக்குறேன்னு தெனமும் அழுவேன்... ஒரே நாளில் 'மாறிப்போன' வாழ்க்கை!
- 'இந்தியா' முழுவதும் 3800-ஐ தாண்டிய 'பலி' எண்ணிக்கை... 'அதிகபட்ச' இறப்பை பதிவுசெய்த 'மாநிலங்கள்' இதுதான்!
- லாக்டவுனால் ‘கல்யாணம்’ தள்ளிபோய்கிட்டே இருக்கு.. இதுக்குமேல ‘வெய்ட்’ பண்ண முடியாது.. இளம்பெண் எடுத்த ‘அதிரடி’ முடிவு..!