'கொரோனா'வுக்கு நடுவுல இப்படி ஒரு கொடுமையா?... 20 பேர் பலியால் 'அதிர்ந்து' போன மாநிலம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்த 20 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Advertising
Advertising

இந்தியா முழுவதும் கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் போராடி வருகின்றன. இந்த நிலையில் தெற்கு அசாம் மாநிலத்தை சேர்ந்த பராக் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 20 பேர் நிலச்சரிவில் சிக்கி  உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்து இருக்கின்றனர்.

கடந்த 2 நாட்களாக அங்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் 356 கிராமங்களை சேர்ந்த சுமார் 3.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதையடுத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தவும், உறவினர்களை இழந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும் அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் உத்தரவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்