'100 கோடி மோசடி'... இதுக்கெல்லாம் 'காரணம்' அவங்கதான் ஆனா... டிவிஸ்ட்க்கு மேல் 'டிவிஸ்ட்' கொடுத்த மக்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பிரபல நிறுவனமான OLX பேரை சொல்லி 100 கோடி ரூபாய் மோசடி செய்த இளைஞர்களை தமிழ்நாடு போலீசார் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் என்னும் பகுதியை சேர்ந்த துநாவல் என்னும் கிராமத்தை சேர்ந்த நரேஷ் பால் சிங், பச்சு சிங் இருவரும் ராணுவ அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு பொருட்களை விற்பனை செய்யும் OLX தளத்தின் வழியாக இந்தியா முழுவதும் சுமார் 100 கோடி வரை மோசடி செய்துள்ளனர். அதோடு இவ்வாறு மோசடி செய்த பணத்தை வைத்து அந்த ஊரே சொகுசாக வாழ்ந்து வந்துள்ளது.

சென்னையில் மட்டும் இதுதொடர்பாக சுமார் நூற்றுக்கணக்கான புகார்கள் பதிவாகி இருக்கின்றன. பணப்பரிவர்த்தனை செயலி வழியாக அந்த இருவரும் இந்த மோசடியை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த தமிழக காவல்துறை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள துநாவல் கிராமத்திற்கு சென்று ஒருவாரம் அங்கு தங்கியிருந்து கொள்ளையர்கள் இருவரையும் கைது செய்தனர்.

அவர்களை கைது செய்யக்கூடாது என ஒட்டுமொத்த கிராமமே ஒன்று திரண்டு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஆனால் காவல்துறை அதிகாரிகள் அந்த மக்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி கொள்ளையர்களை கைது செய்தனர். அங்குள்ள கோர்ட்டில் அவர்கள் இருவரையும் ஆஜர்படுத்திய பின்னர் தற்போது தமிழகத்திற்கு அந்த இருவரையும் கைது செய்து அழைத்து வந்து கொண்டிருக்கின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்