போதையில் நண்பரை கிண்டல் செய்தவருக்கு நேர்ந்த சம்பவம்.. சிசிடிவி காட்சிகளை பார்த்து மிரண்ட போலீஸ்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபுதுச்சேரியில் நண்பர்களுக்குள் போதையில் வைக்கப்பட்ட போட்டியால் சண்டை ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியையே உறைய வைத்துள்ளது.
நடுக்கடலில் தீப்பிடித்த கப்பல்.. கப்பலுக்குள்ள இருக்கது என்னன்னு தெரியுமா? கவலையில் உலக நாடுகள்
புதுச்சேரியில் தங்கி பெரிய மார்க்கெட்டில் உள்ள பூ கடையில் வேலை செய்து வந்தவர் அருளானந்தம். இவருடைய வயது 38. வேகமாக பூ கட்டுவதில் வல்லவரான இவர் நேற்று முன் தினம் மர்மமான முறையில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கினர்.
விசாரணை
அருளானந்தத்தின் உடல் கிடந்த இடத்தில் தடயங்களை சேகரித்த போலீசார், அருகில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். மற்றொரு பக்கத்தில் விசாரணையை தொடர்ந்த காவல்துறை சம்பவம் நடைபெற்ற இடத்தின் அருகில் உள்ள பூக்கடையில் வேலைசெய்யும் சிவபாலன் (19) மற்றும் பாலாஜி (23) ஆகிய இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அருளானந்தத்தின் நண்பர்களான சிவபாலன் மற்றும் பாலாஜி வழக்கமாக பூ வியாபாரத்தை முடித்துவிட்டு தினந்தோறும் குடிப்பது வழக்கம் என்கிறார்கள் அக்கம் பக்கத்தினர். இந்நிலையில், சம்பவம் நடந்த அன்று மூன்று பேரும் அமர்ந்து குடித்திருக்கிறார்கள்.
போட்டி
அப்போது அவர்களுக்குள் பூத்தொடுப்பதில் யார் கைதேர்ந்தவர் என்பதில் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைக்கலப்பாக மாறியது. இந்தநிலையில் அருள் ஆனந்தை, பாலாஜி, சக்தி பாலா ஆகியோர் சேர்ந்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நார் கிழிக்க பயன்படுத்தப்படும் கத்தியால் அருளானந்தத்தை குத்தியதாக காவல்துறையிடம் இருவரும் தெரிவித்திருக்கின்றனர்.
அடுத்த நாள் அதிகாலையில் அந்தப் பகுதியை சுத்தம் செய்ய வந்த துப்பரவு பணியாளர் ஒருவர் அருள் ஆனந்தத்தின் சடலத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார். பின்னர் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்திருக்கிறார்.
அருள் ஆனந்தத்தை கொலை செய்த புகாரில் சிவ பாலன், பாலாஜி ஆகிய இரண்டு பேரை காவல்துறை கைது செய்திருக்கிறது. மது போதையில் ஏற்பட்ட தகராறில் இரண்டு பேர் சேர்ந்து நண்பரை கொலை செய்திருப்பது புதுச்சேரியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தலைக்கு ஏறிய போதை.. தகாத உறவால் வந்த வினை.. இளைஞர் கைது..!
- செல்போன்ல பேசுற மாதிரி நடிச்சிட்டு இருந்திட்டு, திடீரென.. 63 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர்.. வரைபடம் வெளியிட்ட போலீசார்
- பல பெண்களுடன் தொடர்பு... மனைவியை கொலை செய்து நாடகம்.. தாத்தாவை கைது செய்த போலீஸ்!
- என் உயிர் போனாலும் பரவாயில்ல.. எஜமானர் குடும்பத்துக்கு எதுவும் ஆக கூடாது.. நாய் எடுத்த ரிஸ்க்.. நெகிழ வைக்கும் சம்பவம்
- நண்பனை கொன்னுட்டு.. தப்பிக்க திருட்டு கேசில் மாட்டி.. போலீஸ் கொலையாளிய கண்டுபிடிச்ச நேரத்துல திடீர் ட்விஸ்ட்.. ஸப்பா.. க்ரைம் த்ரில்லர் படம் மாரி இருக்கு..
- புதுச்சேரி பியூட்டி பார்லர்ல இது புதுசாக இருக்கே.. பறந்த அலார்ட்.. தேடி போன போலீஸ்.. திகைத்து போன அழகிகள்
- ஓடி வாங்க.. கதவ உள்பக்கமா சாத்திட்டாரு.. உடைச்சு உள்ள போனப்போ போலீசார் கண்ட காட்சி.. என்ன நடந்தது?
- Park-க்கு வந்த பொண்ணு கிட்ட என்ன பண்ணிருக்கான் பாருங்க"... அத்துமீறிய இளைஞருக்கு பொதுமக்களின் 'ஸ்பாட் பனிஷ்மெண்ட்'!
- 22 வருஷம் முன்னாடி காணாமல் போன நகைங்க - அப்பவே அவ்ளோ ரூபா.. இப்போ... இந்தியக் குடும்பத்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கோர்ட்..!
- 'எப்படியெல்லாம் யோச்சிக்கிறாங்க..?'- புதுச்சேரியில் இருந்து நூதன முறையில் மதுபானம் கடத்தியவர் கைது!