'திறந்த வெளியில் மலம் கழித்தததற்காக'.. 'சிறுவர்கள் அடித்தே கொல்லப்பட்ட கொடூரம்'.. நடுங்க வைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திறந்த வெளியில் மலம் கழித்ததற்காக 10 வயது மற்றும் 12 வயது சிறுவர்கள் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தின் சிவ்பூரி மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவனும் அவருடைய சகோதரியான 12 வயது சிறுமியும்  திறந்த வெளியில் மலம் கழித்ததற்காக ஹகிம் யாதவ் மற்றும் ரமேஷ்வர் யாதவ் இருவரும் சேர்ந்து இந்த சிறுவர்களை அடித்தே கொன்றுள்ளனர்.

சிறுவர்கள் இருவரும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இருவரும் சிறுவர்களை பிரம்பால் தாக்கப்பட்டதாகவும், அதன்பின்னர் உடலில் சக்தியின்றி சிறுவர்கள் உயிரிழந்ததாகவும் கூறி, அவர்களின் தந்தை வால்மீகி அளித்த புகாரின்பேரில், ஹகிம் மற்றும் ரமேஷ்வர் யாதவ் இருவர் மீதும் பிரிவு 302, தாழ்த்தப்பட்டோர்/பட்டியலினத்தோர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், குழந்தைகளைத் தாக்கிய ஹகிம் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்துப் பேசிய குழந்தைகளின் தந்தை வால்மீகி,  இன்னும் தங்கள் கிராமத்தில் சாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகள் கடுமையாக நிலவுவதாகவும், தண்ணீர் பிடிக்க வேண்டும் என்றால் கூட மேல்சாதிக்காரர்களின் அனுமதி வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் தங்கள் வீட்டில் கழிவறை வசதி இல்லாததால், குழந்தைகள் திறந்தவெளியில் மலம் கழித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே மாவட்ட ஆட்சியர் அனுக்கிரஹா, உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்துக்கு 50 ஆயிரம் ரூபாயும், குழந்தைகளை அடக்கம் செய்வதற்காக 10 ஆயிரம் ரூபாயும் நிதி உதவி அளித்துள்ளார். தவிர, குழந்தைகளை இழந்து தவிக்கும் வால்மீகியின் குடும்பத்துக்கு தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 4 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.

DALITS, DEFECATING, ASSAULT, DEAD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்